உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பாதையில் கல் உருண்டு பயணி காயம்

ரயில் பாதையில் கல் உருண்டு பயணி காயம்

திண்டுக்கல்:திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கொடைரோடு அம்பாத்துறைக்கு இடையே உள்ள குகை அருகே வந்தபோது கல் உருண்டு விழுந்து பயணி ஒருவர் காயமடைந்தார். மர்ம நபர்கள் யாரேனும் கல்வீசினார்களா என ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரிக்கின்றனர். திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காலை 11:35 மணிக்கு அங்கிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. மாலை 6:15 மணிக்கு கொடைரோடுக்கும் அம்பாத்துறைக்கு இடையில் ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு உள்ள குகை பகுதியை கடந்தது. அப்போது கல் ஒன்று ரயில் மீது உருண்டு விழுந்தது. இதில் திருவனந்தபுரத்திலிருந்து திண்டுக்கல் வரை பயணித்த கரூரை சேர்ந்த பயணி வினோத்,என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. உடனே சக பயணிகள் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த வினோத்திடம் விசாரணை நடத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து குகை பகுதியில் மறைந்து நின்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கல் வீசி பயணிகள் மீது தாக்குதல் நடத்தினார்களா. அல்லது தானாக விழுந்த கல்லா என பாதுகாப்பு படையினர்அங்கு பணியிலிருந்த ரயில்வே பணியாளர்கள் அருகிலிருக்கும் கிராமத்தினரிடையே விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ