உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேரடி விமானங்கள் இல்லாததால் ஊர் ஊராய் சுற்றும் பயணியர்; டிக்கெட் கட்டணமும் ஏறியதால் அதிர்ச்சி

நேரடி விமானங்கள் இல்லாததால் ஊர் ஊராய் சுற்றும் பயணியர்; டிக்கெட் கட்டணமும் ஏறியதால் அதிர்ச்சி

சென்னை: பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பல நகரங்களுக்கு நேரடி விமானம் கிடைக்காததால், பயணியர் தவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் அடுத்தடுத்து வருவதால், பள்ளி கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், விமான நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து, தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்ல, நேரடி விமானங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக திருச்சி, கோவை, மதுரை செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு பயணியர் தள்ளப்பட்டுள்ளனர். விமான நிறுவனங்களும், இதை காரணம் காட்டி டிக்கெட் விலையை உயர்த்திஉள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து துாத்துக்குடி செல்லும் அனைத்து விமானங்களில் நேற்றும், இன்றும் இருக்கைகள் நிரம்பி விட்டன. அதனால், துாத்துக்குடி செல்ல, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணமும் அதிகரித்து, பயண நேரமும் கூடுதலாகி உள்ளது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களில், அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டதால், பயணியர் சென்னையி ல் இருந்து, பெங்களூரு வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

காற்றில் பறந்த உத்தரவு

'இண்டிகோ' நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணியர் தவித்த நிலையில், மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றக் கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டது. டிக்கெட் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், குறிப்பிடப்பட்டிருந்த துாரத்திற்கேற்ப மட்டுமே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தமிழகத்தில் விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், அதை அலட்சியம் செய்கின்றன. வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி, பயணியர் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Vijay D Ratnam
டிச 24, 2025 15:10

வருஷாவருஷம் இதே புலம்பல். 40 வருஷமா இருக்குது இன்னும் 40 வருஷம் கழித்தும் இருக்கும். உலகம் ஊரா இந்த பிரச்சினை இருக்குதுங்க. நியூயார்க்லேர்ந்து லாஸ் ஏஞ்சலஸ் ஃப்ளைட் டிக்கட் நார்மலா கிட்டத்தட்ட 100 டாலர். அதுவே கிருஸ்துமஸ் நியூ இயர் சமயத்தில் 1000 டாலருக்கு மேல் கூட போகும். அதுபோலத்தான் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஸ்விஸ், இட்டாலி, ஸ்பெய்ன்லாம். இப்புடி அடிச்சி புடிச்சி அல்லல்பட்டு போய் கொண்டாடினாத்தான் அது பண்டிகை, திருவிழா.


duruvasar
டிச 24, 2025 14:57

சென்னை விமான நிலையம் டவுன் பஸ்டாண்ட் . வெளியூர் பஸ்கள் இங்கு வராது. டெல்லியில் ஐபிஎஸ் எனப்படும் இன்டெர் ஸ்டேட் பஸ்ஸ்டாண்ட் சென்னை பன்னாட்டு பஸ்ஸ்டாண்டை காட்டிலும் தினசரி அதிக பஸ்களை கையாளுகிறது. "போண்டா 40" க்கு இதைப்பற்றில்லாம் கவலையேகிடையாது.


Amar Akbar Antony
டிச 24, 2025 12:24

வாசகர்களே ஏன் விமானத்தை பார்க்கிறீர்கள். ஆம்னி பேருந்து எப்படி பயண விலையை ஏற்றியுள்ளன். பொங்கலாகட்டும் தீபாவளியாகட்டும் மும்மடங்கு ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது மன்னராட்சியில் மட்டுமல்ல மக்களாட்சியிலும் எகிறியதே. அதுதான் கேட்க ஆளில்லை என்பது.


elango
டிச 24, 2025 12:19

இது உலகம் பூராவும் சீசன் நேரத்தில் விமான கட்டணம் உயர்வது உண்டு. இந்தியாவில் மட்டும் என்று பேசுவது வீண்


ஆரூர் ரங்
டிச 24, 2025 11:47

டுமீல் அமைச்சர்கள் பினாமியாக நடத்தும் ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளை என்னவாம்? இது போன்ற தொடர் விடுமுறைகள் ஆண்டுக்கு மூணு நாலு தடவை வரும். போக்குவரத்து கம்பெனிகள் கொஞ்சம் சம்பாதிக்கலாம். அதற்காக மீதி 350 நாட்கள் காலி விமானங்களை ஒட்டி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்தா விரைவில் மூடுவிழாதான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2025 10:53

காரணம் என்ன >>>> DGCA Directorate General of Civil Aviation கணக்கு வழக்கின்றி லஞ்சம் பெறுகிறது ..... அதன் அமைச்சர் தெலுகு தேச எம் பி ..... தெலுகு தேசம் கட்சியை திருப்திப்படுத்தாவிட்டால் ஆட்சி நிலைக்காது .....


அப்பாவி
டிச 24, 2025 09:16

ஏன்டா இதற்கு பிஜேபிக்கு என்ன சம்பந்தம எதற்கெடுத்தாலும் பிஜேபி குறை சொல்லுவது சில நாய்கள்


நிஜ அப்பாவி
டிச 24, 2025 10:07

அப்பாவி பேர்ல கருத்து போடுது ஒரு ஜந்து.


yts
டிச 24, 2025 09:15

தனி டாக்ஸியில் கூட செல்லலாம் இதற்கு பதிலாக


Gokul Krishnan
டிச 24, 2025 09:12

இண்டிகோ விமான சேவை பிரச்சனை வரும் வரை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் யார் என்றே தெரியாமல் இருந்தது அதன் பின் ஒரு வழியாக நானும் அமைச்சர் என்று ஒருத்தர் வெளியில் தெரிந்தார் இப்போது மீண்டும் காணாமல் போய் விட்டார்


பாமரன்
டிச 24, 2025 09:07

விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து அல்லாத்தையும் வித்து காசாக்கிட்டு இன்னும் அந்த துறைக்கு ஒரு அமிச்சர வச்சிட்டு இன்னா பண்றாங்கோன்னு வேணா கேட்க வாணாம்.. ஆனால் ஒரு ஆர்டர் போட்டாலும் ஃபாலோ பண்ணலங்கறதை எங்க பகோடா கம்பெனிக்கு சம்பந்தமில்லாத மாதிரி நியூஸ் போட தெறமை வேணும் டோய்... எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்


சமீபத்திய செய்தி