| ADDED : செப் 02, 2026 06:58 AM
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்: த.வெ.க., அருள் விக்னேஷ்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் வழங்கப்பட்ட பட்டாக்களில், பிரச்னை உள்ளது. அதை தீர்க்க வேண்டும். மாவட்டத்தில் ஏழைகளுக்கு பட்டா கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: கள்ளக் குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பட்டாவை, 'எம்.ஜி.ஆர்., பட்டா' என சொல் கின்றனர். அதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதற்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஏழைகளுக்கு பட்டாக்கள் வழங்க அரசு சிறப்பு திட்டம் வகுத்துஉள்ளது. இதற்காக கமிஷன் அமைக்கப்பட்டு, 1,500 சர்வேயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகள் அனைத்தும், ஆறு மாதங்களில் நிறைவு பெறும். இவ்வாறு, விவாதம் நடந்தது.