உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதிய பணப்பலன் ரூ.3500 கோடி பாக்கி

ஓய்வூதிய பணப்பலன் ரூ.3500 கோடி பாக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை : ''தமிழகத்தில் 18 மாதங்களில் போக்குவரத்துக் கழகஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் ரூ.3500 கோடி வரை அரசு பாக்கி வைத்துள்ளதை விடுவிக்க வேண்டும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொது செயலாளர் கே.ஆறுமுகநயினார் குற்றம்சாட்டினார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 17,662 வழித்தட கிராமங்களில் 17,322 கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி உள்ளது. இதில் 10 ஆயிரம் வழித்தடங்கள் வருமானம் இன்றி இயக்கப்படுகின்றன. கிராமப்புற பெண்கள், மாணவர்களின் வசதிக்காக பஸ்களை இயக்குவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாச தொகையை அரசே வழங்குவதாக 2022 ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை வித்தியாச தொகையை போக்குவரத்துக் கழகத்திற்கு அரசு விடுவிக்கவில்லை.இதனால் போக்குவரத்து கழகங்கள் தங்கள் இழப்பை ஈடுகட்ட, தொழிலாளர்களின் சேமிப்பு பணம் ரூ.15,000 கோடியை செலவு செய்து விட்டன.ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்கவில்லை. 18 மாதங்களில் வழங்க வேண்டிய பண பலன் ரூ.3500 கோடி பாக்கியுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக 93,000 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத்துடன் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு இல்லை. மாதம் ரூ.100 கோடி வரை ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்படுகிறது.எட்டாண்டுகளில் 10,000 ஓய்வூதியர்கள் இறந்துள்ளனர். வயது 70 க்கு மேல் ஓய்வூதியர் 25,000 பேர் வரை உள்ளனர். அகவிலைப்படி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செவிசாய்க்காமல் மேலும் நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு பேசி முடிக்கப்பட்ட வேண்டிய சம்பள ஒப்பந்தத்தை ஒரு ஆண்டிற்கும் மேலாக பேசி முடிக்கவில்லை. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

GMM
டிச 03, 2024 14:18

மாநிலத்தை எந்த கட்சி ஆண்டாலும் நிர்வாக நடைமுறை நிலையானது. மாநில நிர்வாக தலைவர் கவர்னர். அரசு துறை தலைவர் தவறு செய்யும் போது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரி கவர்னர். நேர்மை யான சட்ட விதியை அமுல்படுத்தும் போது அரசியல் குழப்பம் தவிர்க்க, கவர்னர் விலகி விடுகிறார்.


பாமரன்
டிச 03, 2024 11:27

பொது போக்குவரத்தை மெல்ல மெல்ல தனியார்மயமாக்கி டிக்கெட் விலைகளை தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஒரே தீர்வு.. அரசால் இதை தொழிலாக நடத்த முடியாது.. கிராமப்புற போக்குவரத்துக்கள் அரசே முற்றிலும் இலவசமாக வழங்கலாம்... சும்மா யூனியன்காரங்களுக்கு பயந்தும் பர்ச்சேஸ் கமிஷனுக்கு யோசிச்சிகிட்டும் இருந்தால் இந்த பிரச்சினை கருப்பு பூச்சாண்டி மாதிரி தீர்க்க முடியாததாகி விடும்...


ஆரூர் ரங்
டிச 03, 2024 11:12

பெண்களுககு இலவச பயணம் அவர்கள் கேட்காமலே கிடைத்தது. அதனால் ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டும் கிடைக்கவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும் என்பது பொய்த்துப் போனது.


Rajarajan
டிச 03, 2024 10:08

வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்லும் அரசு பேருந்துகளை பெரும்பாலும் தனியாருக்கு கொடுங்கள். இதை இயக்கும் வழித்தட உரிமை கட்டணம், கட்டண சீட்டு விலை நிர்ணயம் மற்றும் நேர அட்டவணையை அரசே நிர்ணயிக்கட்டும். இதற்கான வழித்தட உரிமை கட்டணத்தை அரசு வசூலிக்கட்டும். நகர்ப்புற பேருந்துகளை மட்டும் அரசு இயக்கினால் போதும். இதில் வரும் நஷ்டம், தற்போதைய ஒட்டுமொத்த நஷ்டத்தை ஒப்பிடும்போது, சுமார் இருபத்தைந்து சதவிகிதம் மட்டுமே. இதை அரசு எளிதாக ஈடு செய்யலாம்.


GMM
டிச 03, 2024 08:35

வருமானம் இல்லாத வழித்தடம். இழப்பை ஈடு செய்ய அரசு ஆணை. நிதி விடுவிக்க வேண்டிய பொறுப்பு நிதி துறை மற்றும் தலைமை செயலர் பொறுப்பு. இவர்களை சஸ்பெண்ட் செய்து சம்பளத்தை ஆளுநர் நிறுத்த வேண்டும். இழப்பை ஈடு கட்ட தொழிலாளர் சேமிப்பு ரூபாய் 15000 கோடி மடை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. கவர்னர் சேமிப்பை செலவு செய்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய முடியும்.


பாமரன்
டிச 03, 2024 11:21

எப்போ பார்த்தாலும் கமல் மாதிரி புரியாம பேசுறதே இந்த GMM க்கு வேலையா போச்சு... கெவுனரே மாநில அரசாண்டதான் செலவுக்கு காசு வாங்குறாப்ல... அது தெரியாம...


raman
டிச 03, 2024 07:09

அரசே வேறு ஒரு கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழிப்பது ஊழல் அல்லவா? ஓர் அரசு ஊழியர் அவ்வாறு பணத்தை எடுத்து தனக்கு செலவழித்துக்கொண்டால் அதற்கு பெயர் கையாடல் என்போம் அரசு செய்தால் அதற்கு என்னபெயர் ? ஓய்வூதிய பணப்பயன் 3500 கோடி பாக்கி என்றால் அரசு 3500 கோடி கையாடல் செய்துள்ளது என்று தானே பொருள் ? யாருக்கு இதற்கு தண்டனை ?


வைகுண்டேஸ்வரன்
டிச 03, 2024 10:31

நிதித்துறை அடிப்படை அறிந்து கொள்ளுங்கள். "அரசே வேறு ஒரு கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழிப்பது ஊழல் அல்ல". GST வருமானத்தை ஒன்றிய அரசு, வணிகர்களுக்கு மட்டுமா செலவழிக்கிறது? வருமான வரி, அதாவது Income Tax, நாம வேலை பார்த்து சம்பாதிப்பதால் காட்டுகிறோமே, அந்த பணம் நம்ம கம்பெனிக்கா செலவழிக்கப்படுகிறது? ஒரு கணக்கில் வரும் பணத்தை அந்த கணக்கில் மட்டும் தான் செலவளிக்க வேண்டும் என்றால், எதுக்கு வசூலிக்க வேண்டும்? யோசியுங்கள்.


Muthu Kumaran
டிச 03, 2024 06:58

வேலை செய்யாமல், ஜால்ரா அடித்து கொண்டு இருக்கும் தொழிலாளர் சங்கம் இருக்கும் வரை எல்லாம் கிடைக்காது


raja
டிச 03, 2024 06:51

அப்பனுக்கு ஊரு ஊருக்கு சிலைவைக்கவும் அவன் பேனாவுக்கு கடல் நடுவில் சிலை வைக்கவும் அப்பன் பேருல வெட்டியா கட்டடம் நூலகமுண்ணு வைக்கவும், ஒரு நடிகைக்கான கார் ரேஸ் நடத்தவும் கோடி கணக்குல மக்கள் பணத்தை வெட்டியா செலவு செய்கிறது திருட்டு திராவிட விடியா மாடல் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பம்... உழைத்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுக்க வக்கு இல்லை...


Visu
டிச 03, 2024 06:32

சிலை வைக்கவே கஷ்டபடுறோம் இதுல ஓய்வூதுயம் தேவையா சம்பளம் கொடுத்தாங்களேன்னு சந்தோசபடுங்க


pounrajan
டிச 03, 2024 06:22

மத்திய பாஜக அரசு நிதியை வஞ்சகமாக கொடுக்காததால் பென்ஷன் கொடுக்கமுடியாது என்பான் திமுக நிதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை