உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்: பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் உறுதி ஏற்று விட்டனர்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கையில் மேலும் கூறியதாவது:'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், 31 சட்டசபை தொகுதிகளில், 12.50 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பினரும், 52 மாத கால, முதல்வர் ஸ்டாலினின் 'பெயிலியர் மாடல்' ஆட்சியில், அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர். தி.மு.க., ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி, மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்து கொண்டிருக்கிறது.மக்கள் நலனை தள்ளி வைத்துவிட்டு, தமிழகத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே, முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் குறியாக இருக்கின்றனர். அமைச்சர் நேரு, எனது பயணத்தை தவறாக சித்தரித்து, அவதுாறு பரப்பி இருக்கிறார்.ஆனால், உண்மை என்னவென்றால், அறிக்கை என்ற பெயரில், அமைச்சர் நேருவை விட்டு, ஸ்டாலின் ஆழம் பார்த்துள்ளார். 'மருமகனை காப்போம். மகனை காப்போம். ரியல் எஸ்டேட் வாயிலாக தமிழகத்தை கூறு போட்டு விற்போம். போதை பழக்கத்தை பரப்புவோம். இயற்கை வளங்களை சுரண்டுவோம். கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்போம். சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து, ஊழல் பணத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவோம்' என்ற, முதல்வரின் எண்ணத்தை கூறும் விதமாகவே, அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.ஸ்டாலின் என்ன மடைமாற்றம் செய்தாலும், எனது எழுச்சி பயணம் தொடரும். தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும், அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Barakat Ali
ஜூலை 21, 2025 11:43

பங்காளி சார்.. அவங்களை ஜெயிலுக்கு அனுப்ப மாட்டீங்களாக்கும்? அது கிடக்கட்டும். திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்தான்.. ஆனா நீங்க ????


pmsamy
ஜூலை 21, 2025 11:36

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவும் மறைந்து விட்டது


Kudandhaiyaar
ஜூலை 21, 2025 11:15

மக்கள் நினைத்தாலும் உங்களிடம் புத்துணர்வோ, தெம்போ, எழிச்சியோ காணவில்லையே. ஒரு வித அச்ச உணர்வுடன் தான் பேசுகிறீர்கள்.


Mario
ஜூலை 21, 2025 09:05

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..


raja
ஜூலை 21, 2025 08:41

வீட்டுக்கு சும்மா இல்லை இந்த திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட கோவால் புர திருட்டு கூட்டத்தை...பெரிய கூரிய ஆப்பை நடுவில் ஆழமாக செருகி இனி தலையெடுக்க முடியாதபடி அனுப்ப போகிறார்கள் தமிழர்கள்...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 21, 2025 07:31

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார் அது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் ...அதை நீங்களும் பிஜேபியும் உணர்த்தீர்களா ? ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் .. ஆடுகள் முட்டிக்கொண்டால் ஓநாய்க்கு கொண்டாட்டம் ..


Senthoora
ஜூலை 21, 2025 06:35

முதலில் இவர் ஜெய்கிறாரா என்று பார்க்கணும். நிரந்தரமா வயல் வேலைக்கு அனுப்பிடுவாங்க.


vadivelu
ஜூலை 21, 2025 08:48

இவரை தோற்கடிக்க அவ்வளவு காசு கொடுக்க போறீங்களா


M Ramachandran
ஜூலை 21, 2025 06:14

இவர் தேர்தல் செலவு டெபோசிட் கட்டுவது வரை தீமுக கவனித்து கொள்ளும். இந்த ஆளும் நைனார் நாகேந்திரனும் நம்ப தகுந்தவர்கள் கிடையாது


M Ramachandran
ஜூலை 21, 2025 06:00

தான் தோர்ப்பது உறுதி என்றாலும் பெரும் தோகை ஆளும் கட்சி மூலம்கிடை திருக்கும் . இது ஆட்சியில் அமர்ந்தாலும் கிடைய்காது. நோவாமல் நோம்பு நோக்கக்கூடிய ஆள்.


Kumar
ஜூலை 21, 2025 04:59

இதனை ஆரம்பித்து வைத்தது பிஜேபி தான் அதனால் கூட்டணி தர்மம் குறித்து பிஜேபி அமைதி காக்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை