உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் முறையில் பட்டா பிரதி; ஓ.டி.பி., கிடைக்காமல் மக்கள் தவிப்பு

ஆன்லைன் முறையில் பட்டா பிரதி; ஓ.டி.பி., கிடைக்காமல் மக்கள் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இணையவழியில் பட்டா பிரதி எடுப்பதற்கு, மொபைல் போன் எண் கொடுத்தாலும், அதற்கான ஓ.டி.பி., எனப்படும் தகவல் கிடைப்பதில்லை என, பொது மக்கள் புகார் கூறுகின்றனர். தமிழகத்தில், 2000ம் ஆண்டுக்கு பின், கணினி வாயிலாக பட்டா தயாரிக்கப்படுகிறது. இந்த விபரங்களை, 'இ - சேவைகள்' இணையதளம் வாயிலாக பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் ஊரகம், நகர்ப்புறம், நத்தம் நிலங்களின் பட்டா, நில வரைபட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் தங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் அல்லது பட்டா எண் விபரங்களை உள்ளீடு செய்தால் விபரங்களை பார்க்க முடியும். வீடு, மனை வாங்கும் மக்கள், சம்பந்தப்பட்ட சொத்தின் உண்மை தன்மையை அறிய, இந்த வசதி பேருதவியாக இருந்தது. இந்நிலையில், நிலத்தின் அடிப்படை தகவல்களை உள்ளீடு செய்யும்போது, அவர்களின் மொபைல் போன் எண்ணையும் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்படும் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை ரகசிய குறியீட்டு தகவல் வரும். அதை இணையதளத்தில், 2 நிமிடங்களுக்குள் உள்ளீடு செய்தால் மட்டுமே, பட்டா பிரதியை மக்கள் பார்க்க முடியும். இதன்படி, பொது மக்கள் மொபைல் போன் எண்ணை சரியாக அளித்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓ.டி.பி., வருவதில்லை.

இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:

மொபைல் போன் எண்களை பதிவு செய்வதில், பொது மக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதற்கான செயல்பாடு சரியாக இல்லை. சரியான விபரங்களை அளித்தாலும், 2 நிமிடங்களுக்குள் ஓ.டி.பி., வருவதில்லை. நேரம் கடந்ததும் மீண்டும் பெற வேண்டும் என்றால், அனைத்து விபரங்களையும் மீண்டும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், 5 நிமிடத்தில் முடியும் வேலைக்கு, 15 நிமிடங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து, அனைத்து விபரங்களையும் அளித்தாலும் ஓ.டி.பி., வருவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, நில அளவை மற்றும் நில வரித் திட்ட துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொழில்நுட்ப பிரிவு வாயிலாக, இந்த புகார்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்; விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jayvee
ஜன 04, 2025 18:32

இது வெறும் கண்துடைப்பு நாடகம் .. அனகாபுத்தூரில் அரை கிரௌண்டுக்கு 20000 லஞ்சம் .. இதுவே ஒரு கிரௌண்ட் என்றால் 40000 .. வணிக பயன்பாட்டுக்கு என்றால் இரண்டு மடங்கு .. உள்ளாட்சி தேர்தலுக்கு மம் இதில் பாதிதான் இருந்தது ..அதிமுக இருந்தபோது அதிலும் பாதிதான் இருந்தது


raja
ஜன 04, 2025 08:34

திருட்டு மாடல் ஆட்சி நடத்தும் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப தலைவன் துக்லக் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தானே...


Vaduvooraan
ஜன 04, 2025 07:29

இது என்றில்லை..கணினிமயமாக்கப்பட்ட எல்லா அரசுத் துறை சேவைகளும் இப்படித்தான் ஓட்டுனர் உரிமத்துக்கான இணையதள சேவை மாதிரி வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பாமல் பாதியில் நின்று குழப்பம் மேலிட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தை ஒட்டியுள்ள தனியார் சேவை மையத்தை அணுகினால், அவர்கள் இரண்டு நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு 200ரூ வாங்டிக் கொண்டு தேவையான ஆவணங்களையும் கையில் கொடுத்து விடுவார்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களையே திணற வைக்கிற மாதிரி இணையதள கட்டமைப்பு என்ன.. அரசு அதிகாரிகளுக்கு பதில் அரசுத்துறை அலுவலக வாசலில் இருக்கும் கடைகளுக்கு கொண்டாட்டம்..வேறென்ன


சூரியா
ஜன 04, 2025 06:54

மொபைல் நம்பர் தராமல் இந்த சேவைகளை, clip.tn.gov.in என்ற தளத்தில் பெறலாம்.


பாமரன்
ஜன 04, 2025 06:33

மக்கள் ஏதோ துட்டில்லாம டீடெயில்ஸ் வாங்கிட கனவு கான்றாய்ங்களோ....??? ரெண்டு நிமிஷத்துல ஃபார்மாலிட்டி பண்றது கஷ்டம்னு தெரியாமல் இருக்கும் அரசை கண்டித்து குறைந்தது பாஞ்சு லட்சம்... ச்சே நிமிடங்கள் வரை டைம் குடுக்கனும்னு காது குத்தி கடா வெட்டும் போராட்டம் நடத்த வேண்டியதுதான்...


veera
ஜன 04, 2025 07:50

இவன் எதுக்கு இப்போ உலருறான் கருமம்


புதிய வீடியோ