உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா

மதுரை: '' தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள், '' என மதுரையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

தலை வணங்குகிறேன்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: மதுரை மண்ணில் முதலில் மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி இந்த உரையை துவக்குகிறேன். சொக்கநாதருக்கும், கள்ளழகருக்கும், திருப்பரங்குன்றம் முருகனுக்கும் தலைவணங்கி மகிழ்கிறேன். தமிழகம் வந்து தமிழக மக்களை சந்திக்கும்போது, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.மதுரை சாதாரண நகரம் அல்ல. 3 ஆயிரம் ஆண்டு கால வரலாற்று பெருமை கொண்ட முக்கியமான புனித இடம். வரும் 22 ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு இங்கு நடக்கிறது. அதை இந்த மண்ணில் சிறப்பாக நடத்தி தர வேண்டும்.

தமிழகம் மீதே

மதுரை மண் பல விதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். இந்த கூட்டமும் மாற்றத்தை உருவாக்கும். தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் என உங்களிடம் கூறுகிறேன். வரக்கூடிய 2026 சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அ.தி.மு.க., -பாஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் எந்த பகுதியில் இருந்தாலும் எனது சிந்தனை தமிழகம் மீது தான் உள்ளது.

மக்களின் நாடித்துடிப்பு

அமித் ஷாவினால் தி.மு.க., ஆட்சியை அகற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அமித் ஷாவினால் முடியாது என சொல்வது சரிதான். ஆனால் தமிழக மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள். அதற்காக காத்துக் கொண்டு உள்ளார்கள். மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவனாக சொல்கிறேன் வரும் தேர்தலில் தி.மு.க.,வை தூக்கி எறிய மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.

பயங்கரவாதிகளுக்கு பாடம்

ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. பஹல்காமில் அப்பாவி பொது மக்களை , மதத்தின் பெயரால் கொன்ற பயங்கரவாதிகளை, முப்படையை திரட்டி, அவர்கள் மண்ணிலேயே பிரதமர் மோடி அழித்தார். இதுதான் அவர்களுக்கு நாம் அளித்த பாடம்.இதற்கு முன்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் காஷ்மீரின் யூரி, பஹல்காமில் தாக்குதல் நடந்த போது, நமது முப்படைகள் வீரத்தை வெளிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்தை கண்டறிந்து துல்லியமாக தாக்கி, அவர்களின் இடத்தை மண்ணோடு மண்ணாக்கியது நமது ராணுவம். மோடி ஆட்சியில் ராணுவத்திலும் தன்னிறைவான நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் சிறப்பான நிலை ஏற்பட்டு உள்ளது.

தொடர்கிறது

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பேசும் இந்த நேரத்தில் இந்திய வான்வெளி சாதனையை சொல்ல வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்கள் காவிரி இன்ஜின் என்ற சொல்லை சொல்ல துவங்கி உள்ளனர். பாகிஸ்தான் ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் வீசியபோது, அனைத்தையும் அடித்து தூள் தூளாக்கி இந்திய ராணுவம், நமது வான் பாதுகாப்பை உலகத்திற்கு பறைசாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பயங்கரவாதிகள் மீண்டும் வாலாட்டினால், அவர்கள் வீடுகளுக்குள்ளேயே அழிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார்.

டில்லியை போல்

வரக்கூடிய சட்டசபை தேர்தல், ஒவ்வொரு தொண்டருக்கும் முக்கியமான, அவசியமான களமாகும். ஒடிசா மாநிலத்திலும் முழு மெஜாரிட்டி உடன் பா.ஜ., ஆட்சி அமைந்தது. ஹரியானாவிலும் மிகப்பெரிய வெற்றியுடன் 3வது முறையாக பதிவு செய்தோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பா.ஜ., பதிவு செய்துள்ளது. 2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டில்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டில்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

ஊழலில்

ஆட்சியில் இருக்கும் தி.மு.க., ஊழலில் திளைத்துக் கொண்டு உள்ளது. ஏழை மக்களுக்காக மோடி அரசு கொடுக்கும் பணத்தை தி.மு.க., அரசு ஏழைகளுக்காக செலவிடாமல், அவர்களுக்கு நன்மை கிடைக்காமல் தடுத்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தாலும், வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டு உள்ள அச்சத்தாலும், வாழ முடியாமலும், மத்திய அரசு திட்டங்கள் கிடைக்காமலும் தவித்து கொண்டு உள்ளனர்.

தைரியம் இருந்தால்

தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ஊழல் செய்து சட்டவிரோதமாக ஊழல் ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு, 100க்கு 100 சதவீதம் தோல்வியடைந்த அரசாக காட்சி அளிக்கிறது. தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி பட்டியலை அளித்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல், 90 சதவீதம் நிறைவேற்றியதாக சொல்கின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், தேர்தல் வாக்குறுதி பட்டியலை பார்த்து எத்தனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என பார்த்து சொல்ல வேண்டும்.ஊழல் மட்டுமல்லாமல், கள்ளச்சாராயத்தினாலும் அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர்.தென் மாவட்டங்களில் ஜாதி பிரச்னைகளாலும், பிரிவினைவாதத்தினாலும், அரசியல் லாபத்தை கருத்தில் கொண்டு தி.மு.க., அரசு செயல்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல், வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

கோரிக்கை

ஆயிரம் ஆண்டு கால பழமை உள்ள அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லக்கூடிய துணிச்சல் தி.மு.க.,அரசுக்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக முருக பக்தர்கள் வழிபட்டு வந்த இந்ததலத்தை அரசியல்லாபம் கருதி பிரினைவாதம் கருதி தி.மு.க., அரசு செயல்படுகிறது. 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு வலிமையையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டும்.

நன்றி சொன்னீர்களா

தமிழகத்தில் தமிழ் தமிழ் என பேசும் நீங்கள், பாட திட்டத்தை தமிழில் ஏன் கொண்டு வரவில்லை. உயர்கல்வியை தமிழில் கற்பிப்பதற்கு என்ன தடை உள்ளது பொறியியல் பாடத்திட்டம் தமிழில் இயற்றப்பட வேண்டும். தமிழின் மரபு சின்னமான, செங்கோலை நாட்டின் உயர்ந்த இடத்தில் மோடி கொண்டு சென்ற போது, நன்றி சொன்னீர்களா?

அதிக நிதி

மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 1.53 லட்சம் கோடி மட்டுமே கொடுத்தது. ஆனால், பா.ஜ., ஆட்சியில் 6.80 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. சாலை மேம்பாட்டுக்காக ரூ.63 ஆயிரம் கோடியும், உள்கட்டமைப்புக்காக ரூ.73 ஆயிரம் கோடியும், விமானம் கட்டுவதற்கும் ரூ.3,500 கோடியும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சியை எப்படி வீட்டிற்கு அனுப்ப போகிறோம். எப்போது அனுப்பப்போகிறோம்? அதற்கு என்ன செய்யப்போகிறோம் என தொண்டர்கள் சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும். அதே எண்ணத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

நிம்மதியில்லை

இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழக மக்களுக்கு நிம்மதி இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எப்படி பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்து சினிமா படம் தயாரிக்கும் தம்பிகள் உலவிக் கொண்டு இருக்கும்போது எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி, எந்த வேலையும் செய்யாமல் நான்கு ஆண்டு காலம் தி.மு.க., ஆட்சி காலத்தை கடத்தி உள்ளார்கள். எப்படி நிம்மதி இருக்கும். ஒரு சமுதாயத்தை சேர்ந்த, ஒரு மதத்தை சேர்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவதை மட்டும் முழு நேர வேலையாக தி.மு.க., அரசு வைத்துள்ளது. எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும். நடுத்தர குடும்பத்தில் நிம்மதியாக வெட்டுப்படாமல், வீடுகளில் பாதுகாப்பாக யாராவது இருக்க முடியும் என்றால் முடியாது. கொங்கு பகுதிகளில் முதியோர்களை குறிவைத்து கொல்கின்றனர். தென் பகுதிகளில் ஜாதி வன்முறைகளில் கொல்கின்றனர். சென்னையில் கூலிப்படையினரை வைத்து கொல்கின்றனர். எங்கேயும் யாருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டாக நடந்து கொண்டு உள்ளது. அதையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். 2026 ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அமித்ஷா இங்கு வந்துள்ளார். இதற்காக ஓட்டுச்சாவடிகளில் வேலை செய்பவர்கள், மாவட்டங்களில், மாநிலத்தில் வேலை செய்பவர்கள், பா.ஜ., பொறுப்புகளில் இருப்பவர்களை மட்டும் அழைத்து இந்த கூட்டத்தை நயினார் நாகேந்திரன் நடத்துகிறார். 2026 நமது ஒற்றை இலக்கு தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்புவது மட்டுமே. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

துரோகம்

முன்னதாக இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழக்தில் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும். ஷா என்ற பெயரை கேட்டால் திமுக.,வினருக்கு ஷாக் ஆக உள்ளது. தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சியை அமித்ஷா கொண்டு வரப்போகிறார் ஹரியானா, மஹாராஷ்டிரா, டில்லியில் ஆட்சியை கொண்டு வந்தது அமித்ஷா தான். மாதம் தோறும் அமித்ஷா தமிழகம்வருவார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு தி.மு.க., துரோகம் செய்துள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Mario
ஜூன் 13, 2025 08:47

அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், "கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இனி ஒரு முறை கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொன்னால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றவும் எடப்பாடி பழனிசாமி தயங்க மாட்டார் என்றும்" கூறி வருகின்றனர்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 09, 2025 06:40

பிஜேபி ஆட்சி ஒழுங்காக ஸ்பெக்ட்ரம் கேஸை கொண்டு சென்றுந்தால் இந்நேரம் திமுக கூப்பில் தான் இருந்திருக்கும்


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 09:21

1. 2 ஜி ஊழலில் குறைந்தது பத்து டாப் கார்பரேட் முதலாளிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அந்நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்தால் நாட்டில் திடீர் பொருளாதார சரிவே ஏற்படுமாம். 2. ராசா வழங்கிய 2 ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறி வழங்கப்பட்ட எல்லா லைசென்ஸ்களையும் சுப்ரீம்கோர்ட் கேன்சல் செய்துவிட்டது. 3 இது தெரிந்தும் கீழ்கோர்ட் நீதிபதி முறைகேட்டுக்கு ஆதாரமில்லை எனக்கூறி ஆபத்தான ஊழல்வாதிகளை விடுவித்து விட்டார். 4. ஹைக்கோர்ட்டில் போடப்பட்ட மேல் முறையீடு கிணற்றில் போட்ட கல். தேசபக்தி குறைந்து வருகிறது என்பது நன்கு புரிகிறது.


J.Isaac
ஜூன் 10, 2025 06:49

ம.பி வியாபம் ஊழல் ஞாபகம் இருக்கா? இப்போது ம.பியில் 230 கோடி அரசு ஊழியர்கள் சம்பள மோசடி கேள்விப்பட்டிறீர்களா?


Oviya Vijay
ஜூன் 08, 2025 23:30

என் பெயரில் ஒரு போலிப் பதிவு இங்கே இடம் பெற்றிருக்கிறது. பிரியாணி அண்டா திருட்டு கும்பலின் கைங்கர்யம்...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 09, 2025 07:15

இருநூறு ரூபாய் உருட்டுக்கு ஆபத்தா ? அய்யகோ தமிழினமே ஈதென்ன கொடுமை ...


RRY
ஜூன் 08, 2025 23:21

NDA will form next gvt in Tamil Nadu


J.Isaac
ஜூன் 10, 2025 09:17

ரவடி ராஜா ஏகாம்பரம்


Oviya Vijay
ஜூன் 08, 2025 23:19

இங்கு என் பதிவை பார்த்து விட்டு என்னை வசை பாடுவோர்களுக்கு நன்றி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நீங்கள் இங்கே தெளிவுபடுத்த மறுக்கிறீர்கள். எந்த ஆட்சியை நீங்கள் வசை பாடுகிறீர்களோ எந்த கட்சியை இங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கட்சியில் யாரெல்லாம் உத்தமர்கள் என்பதை மட்டும் நீங்கள் சொல்ல மறுக்கிறீர்கள். அதை மட்டும் ஏன் உங்கள் மனம் உணர மறுக்கிறது. அதனால் தான் நான் சொல்கிறேன்... மக்கள் அனைத்தையும் உணர்ந்தவர்கள். இங்கு யாருமே உத்தமர்கள் இல்லை என்று அவர்களுக்கும் தெரியாமலில்லை... ஆகையால் தான் உங்களை அவர்கள் புறந்தள்ளுகிறார்கள்... புரிந்து கொள்ளுங்கள்... தெளிவு பெறுவீர்கள்... இல்லையேல் சங்கிகளாகவே தொடர்வீர்கள்...


venugopal s
ஜூன் 08, 2025 22:50

அப்படியே திமுகவை வீட்டுக்கு அனுப்பினாலும் உங்களை உள்ளே வர விடமாட்டோம்!


Bala
ஜூன் 09, 2025 07:18

வெளியே இருந்து உள்ளே வந்த ஓங்கோலை மீண்டும் ஒங்கொளுக்கே அனுப்புவோம்


Bhaskaran
ஜூன் 08, 2025 22:38

89 ல் காங்கிரஸ் தனித்து போட்டி ராஜீவ் மூப்பனார் பிரச்சாரம் ஒரளவு செல்வாக்குள்ள காங்கிரஸ் 28 தொகுதி மட்டும் வெற்றி ஆளே இல்லாத காவி எப்படி போணியாகும்


Palanisamy T
ஜூன் 08, 2025 22:10

இதைச் சொல்லவா டில்லியிலிருந்து இங்கு வந்தீர்கள். திமுக வை வீட்டிற்கு அனுப்பவேண்டுமென்றால் - தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதென்று இப்போதே அறிவித்து விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் சொன்ன வார்த்தைகளில் உண்மையில்லை என்று இப்போதே மக்களுக்கு தெரிந்துவிடும்.


Mariadoss E
ஜூன் 08, 2025 21:57

ஒன்று சேர்ந்து வெற்றி பெற முயற்சி செய்யவும்....


புரொடஸ்டர்
ஜூன் 08, 2025 20:41

மத்திய அரசிலிருந்து பாஜகவை நிரந்தரமாக நீக்கும் காலம் வந்துவிட்டது அமித்ஷா.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 09, 2025 06:00

கொஞ்சம் தள்ளிக்குங்க ப்ரொட்டஸ்டர்.....ஒரு மிஸ்டேக் பன்னிட்டீங்க..... மத்தியில் காங்கிரஸ்ஸும் ( அது கட்டெரும்பானது வேறு விஷயம் ) மாநிலத்தில் சுடலை ஆட்சியும் நிரந்தரமாக நீக்க வந்தவர் தான் அரசியல் சாணக்கியர் அமித்ஷா....போவியா அங்கிட்டு....!!!