உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களே உஷாராக இருங்க; சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் பலி

மக்களே உஷாராக இருங்க; சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மோகன் (வயது 60) என்பவர் உயிரிழந்தார். கொரோனா தொற்று சமீபகாலமாக தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டிலும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.

இரு புதிய வகைகள்

சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என, தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், பொது இடங்களில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டில் என்.பி. 1.8.1., மற்றும் எல்.எப். 7., ஆகிய இரு புதிய கொரோனா வகைகள் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.

முதியவர் பலி

கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் இன்று (மே 28) சென்னை மறைமலை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் (வயது 60) என்பவர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகத்தில் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

திருஞானம்,மாதவரம் பால்பண்ணை
மே 28, 2025 19:48

ஆழ்ந்த இரங்கல், ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்


Chandramohan Srinivasan
மே 28, 2025 16:52

வேண்டாம் சுடலைத பிடிச்சு தொங்குங்க


sribalajitraders
மே 28, 2025 15:11

அப்போ மறுபடியும் கை தட்டணுமா


vivek
மே 28, 2025 15:30

கை தட்னா உனக்கு மூளை வளரும்..முயற்சி செய்து பாருங்கள்....


Srinivasan Krishnamoorthi
மே 28, 2025 14:46

வெளியேர்ந்து வீட்டுக்குள் வரும் பொது கால் கை கழுவுங்க. சுடு தான் குடிங்க. குளிர் பணம் தவிருங்க.


R Dhasarathan
மே 28, 2025 14:25

போன கொரானாவில் விழுந்த வியாபாரம் இப்பதான் மெதுவாக நிமிர்ந்து நிற்கிறது, அதற்குள்ளாகவா மறுபடியும்....


SUBRAMANIAN P
மே 28, 2025 14:04

மீண்டுமா?.....


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 28, 2025 14:02

சரக்குல ஊறிப்போன ஒடம்பா இருந்தா இதுதான் நெலம ....


நிவேதா
மே 28, 2025 13:54

மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு கொண்டுவந்தால் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடையும் . நம்மால் முடிந்தது நம்மை நாமே பாதுகாத்து கொள்வது.


lana
மே 28, 2025 13:53

இப்போ போன வாரம் தான் எங்கள் விடியா அரசு corona check பண்ணுவது கை விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை