உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்காட்சி அரங்குகளை மக்கள் பார்வையிடலாம்!

கண்காட்சி அரங்குகளை மக்கள் பார்வையிடலாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு கண்காட்சி அரங்குகளை, வரும் 11, 12 ஆகிய தேதிகளில், பொது மக்கள் பார்வையிடலாம்.தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி கூறியதாவது:தமிழகத்தின் தொழில் சூழல், தொழில் பலம் குறித்து முதலீட்டாளர்களும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும், கல்லுாரி மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வசதியாக, தொழில்துறை சார்பில், விருச்சொல் எனப்படும் மெய்நிகர் காட்சி தொழில்நுட்ப அரங்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. அரங்கிற்கு வரும் பார்வையாளர்கள், மெய்நிகர் எல்.இ.டி., கண்ணாடியை அணிந்து, தமிழகம் முழுதும் உள்ள சிப்காட், டிட்கோ தொழில் பூங்காக்கள், அதில் உள்ள தொழிற்சாலைகள், தொழில் துறை பணிகளை பார்க்கலாம். மாநாடு நிறைவு பெற்றாலும், கண்காட்சி அரங்குகளை, வரும் 11, 12 ஆகிய இரு தேதிகளில் பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Varadarajan Nagarajan
ஜன 09, 2024 07:54

ஒரு இடத்தில் தொழில் தொடங்கவேண்டுமென்றாலும் தொடர்ந்து நடத்தவேண்டுமென்றாலும் தகுந்த அடிப்படை கட்டமைப்பு, தேவையான திறன்படைத்த தொழிலாளர்கள், நல்ல அரசு நிர்வாகம் மற்றும் இணக்கமான அரசியல் சூழ்நிலைகள் தேவை. தமிழகத்தில் சிறந்த கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்கள் உள்ளது. ஆனால் அரசு நிர்வாகம் மேம்படுத்தபடவேண்டும். தொழில் தொடங்க தேவையான எளிமையான நடைமுறைகள் போதுமானதாக இல்லை . குறிப்பாக அனுமதி மற்றும் உரிமம் பெற ஒற்றைச்சாளரமுறை இங்கு நடைமுறையில் இல்லை. இவற்றிற்கு ஏற்படும் கால தாமதம். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு காட்டும் ஆர்வம் அவற்றை தொடர்ந்து நடத்த தேவையான இணக்கமான ஒத்துழைப்புகளையும் கொடுக்க வேண்டும். அரசு இயந்திரம் அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால்தான் இது சாத்தியம். முதலில் நாம் அதை புரிந்துகொள்ளவேண்டும். அதோடு தொழிற்சாலைகளை சென்னையை சுற்றியீ இல்லாமல் பின்தங்கிய டெஹன்மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லவேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி