உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பால், காய்கறிக்கு அலைந்த மக்கள்: விலையை உயர்த்திய வியாபாரிகள்

சென்னையில் பால், காய்கறிக்கு அலைந்த மக்கள்: விலையை உயர்த்திய வியாபாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னைக்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களிடையே பீதியை ஏற்படுத்தின.மழைக்கு முன்பே, தாழ்வான பகுதி மக்கள் முகாம்களுக்கு அழைக்கப்பட்டதால், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தங்களது நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தினர். பொதுமக்கள், பால், காய்கறிகள், குடிநீர் கேன்களை வாங்கி சேமிக்கத் துவங்கினர். ஒருவரே, கிலோ கணக்கில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றதால், நேற்று முன்தினம் மாலையே பெரும்பாலான கடைகளில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, கிலோ 100 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. அதேபோல, வெங்காயம் 90 ரூபாய்; மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது. சில இடங்களில் பால் தட்டுப்பாட்டை தொடர்ந்து, அரை லிட்டர், 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.மேலும், 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேன் குடிநீர், 50 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், ஆவின் பால் தட்டுப்பாடு நிலவியது. மழைக்கு முன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் மீது கவனம் செலுத்துவதில் கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக, அரசு நடத்தும் ஆவின் பாலுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். காய்கறிகளின் தட்டுப்பாட்டை குறைப்பதுடன், அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

vbs manian
அக் 16, 2024 09:41

எவ்வளவு அடிபட்டு என்ன பிரயோஜனம். இவர்களுக்குத்தான் மறுபடியும் வோட்டு.


vbs manian
அக் 16, 2024 09:38

பார்த்த ஞாபகம் இல்லையோ.


Lion Drsekar
அக் 16, 2024 08:44

யாரை குறை சொல்வது, மெரினா கடற்கரையில் காலாவதியான பின்பும் வாகன நிறுத்தத்துக்கு 60 க்கும் மேற்ப்பட்டோர்கள் கொள்ளை லாபம் வசூல் , கொடுக்காதவர்களுக்கு தர்ம அடி . என்னதான் வீடியோ போட்டாலும் எங்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது , எல்லாமே தலைக்கு மேலே மூழிகிட்டது , இனி இப்படித்தான்


Kumar Kumzi
அக் 16, 2024 08:28

திருட்டு திராவிஷ மாடலின் பகல் கொள்ளைக்காரனுங்க


VENKATASUBRAMANIAN
அக் 16, 2024 07:50

இவர்கள் கொடுத்துள்ள பில்டப் எல்லோரும் விலையை உயர்த்தி விட்டார்கள். அரசு அதிகமாக பால் தயிர் இவற்றை இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு போட்டோ ஷுட் செய்யவே நேரம் இருந்த்து. இதுதான் திராவிட மாடல்


S. Neelakanta Pillai
அக் 16, 2024 07:42

கூடுதல் விலைக்கு தள்ளியதுதான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பலன்.


S.kausalya
அக் 16, 2024 06:15

ஆனால் அதிக வரத்து காரணமாகவும், விளைச்சல் அதிகம் காரணமாகவும் காய்கறி விலை குறைந்தால் இதே வியாபாரிகள் , விலை குறைவு காரணமாக மக்கள் மகிழ்ச்சி யுடன் இருக்கிறார்கள் என கருதாமல், அய்யோ எங்களுக்கு நஷ்டம் ஆக உளளது என்று கண்ணீர் சிந்துவார்கள். லாபம் என்றால் தங்களுக்குள் சந்தோஷ பட்டு கொள்வார்கள்.ஆக இவர்களுக்கு நஷ்டம் என்றால் மக்கள் கவலை பட வேண்டும். இந்த மாதிரியான இயற்க்கை பேரிடர் காலத்தில் கூட கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இவர்களுக்கு. மக்களை பற்றிய சிந்தனை இல்லை இவர்களுக்கு.


Dharmavaan
அக் 16, 2024 08:07

அரசு விலையை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை நியாய விலை கடைகளில் ரேஷன் கார்டுக்கு கொடுக்க வேண்டும்


Kasimani Baskaran
அக் 16, 2024 05:13

பொதுமக்கள் நிர்க்கதியாக நிற்பது ஒன்றும் புதிதல்லவே. என்று திராவிடன் முன்னேற தமிழன் ஆதரவு தெரிவித்தானோ அன்றே இதற்க்கெல்லாம் தமிழன் தன்னை பழக்கப்படுத்திக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.


கிஜன்
அக் 16, 2024 04:40

ஆவின் பால் புறநகர் பகுதிகளில் நேற்றே கிடைக்கவில்லை .... நீங்கள் எழுதிவிட்டீர்கள் அல்லவா ... இன்று சரிசெய்து விடுவார்கள் ... நாசர் சார் .... மனோ தங்கராஜை புகழ வைத்துவிடாதீர்கள் ....கொஞ்சம் வேலை பாருங்கள் .... உங்கள் ஏரியா ...அம்பத்த்தூர் பட்டரவாக்கம் ...பகுதிகளிலேயே பால் தட்டுப்பாடு நிலவுகிறது ...


Duruvesan
அக் 16, 2024 08:15

என்ன மூர்க்ஸ் ஹாப்பி தானே?


raja
அக் 16, 2024 04:28

இதை நான் நேற்றே சொன்னேன் ஆட்டோ காரர்கள் சொழிங்க நல்லூரில் இருந்து பீச் ரோடு வரைக்கும் உள்ள அரை கிலோமீட்டர் தூரம் ரூபாய் 300 வாங்கினார்கள்.. ஒரு லிட்டர் பால் ரூபாய் நூற்று ஐம்பதுக்கு விற்று வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்தார்கள் என்று...


சமீபத்திய செய்தி