உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!

துாத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன் ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.துாத்துக்குடி, ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க ஒரு தரப்பினரும், ஆலையை அப்பகுதியில் இருந்து அகற்ற ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் மீனவ கிராம மக்கள், சுயஉதவி குழு பெண்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என, பல தரப்பினரும் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று திரண்டனர்.ஒரே நேரத்தில், 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. 'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து வேலை வழங்க வேண்டும்; ஆலையை திறக்க உறுதி அளிக்கும் கட்சிக்கு ஓட்டு போடுவோம்' என, அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, ஒரு அமைப்பிற்கு ஐந்து பேர் வீதம் கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர். அவர்கள் அளித்த மனு:ஸ்டெர்லைட் ஆலையை பசுமை முறையில் மீண்டும் துவங்கலாம் என, நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். சுற்றுச்சூழலுக்காக பர்யாவரண பூஷண் விருது பெற்ற பேராசிரியர் கணபதி யாதவ், ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோரின் இந்த அறிக்கையை வரவேற்கிறோம். அவர்களின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தொழில் துறை மீட்சி மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மேம்பாட்டுடன் கூடிய வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது விஞ்ஞான அடிப்படையிலான தீர்வு கிடைத்துள்ளது. மாநில அரசு சமநிலையான முடிவை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பு, மற்றும் நாட்டிற்கும், மாநிலத்திற்குமான செம்பு தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஆலையை மீண்டும் திறக்க சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

VSMani
ஜூலை 26, 2025 12:16

ஸ்டெர்லைட் ஆலை vendaam entru uir thiyakam seithaarkal. ellaame veenaa?


Bhaskaran
ஜூலை 25, 2025 17:54

வரும் வாரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் அதிக ஆதாயம் பெற்ற கோபால் நாயக்கர் ஸ்டெர்லைட் மூடியது சரியென்று தூத்துக்குடியில் பேருரை ஆற்றப்போறாராம்


selva
ஜூலை 23, 2025 02:29

குஜராத்தில் சமீபத்தில் அடானி காப்பர் ஆலை செயல்படத் துவங்கிவிட்டது. Malanjkhand Copper ப்ராஜெக்ட் பலகாத்


rama adhavan
ஜூலை 22, 2025 23:50

மக்கள் உயிரை குடிக்கும் டாஸ்மாக் மதுவை ஒப்பிடும் போது ஸ்டெர்லைட் ஆலை அப்பகுதி மக்களுக்கு நன்மையே செய்தது.


சிந்தனை
ஜூலை 22, 2025 22:57

அடுத்தவன் சொத்தை அபகரித்து போட்ட சாலையும் பாலமும் எனக்கு வேண்டும் அடுத்தவன் வாழ்க்கையை அழித்துப் போட்ட தார் சாலை எனக்கு வேண்டும் ஆனால் எனக்கு ஒரு தொல்லை செய்து யாருக்கும் எந்த நன்மையும் நடக்க விட மாட்டேன் அதனால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூலை 23, 2025 08:31

உங்கள் கருத்து புரியவில்லை.


கண்ணா
ஜூலை 22, 2025 22:04

எங்கே அந்த தூத்துகுடி திமுகவின்‌ குண்டர் அணி செயலாளர்...


Anbuselvan
ஜூலை 22, 2025 21:23

பதிலுக்கு இவங்களும் துப்பாக்கி சூடு நடத்திடுவாங்களோ


Narasimhan Krishnan
ஜூலை 22, 2025 21:22

எந்த ஆட்சியில் இதை திறக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அந்த விழிப்புணர்வு வேண்டும். போராட்டம் என்பது மக்களை கவர்ச்சி ஆசை காட்டி பெரும் திரளான மக்களை கூட்டுவது அசுர பலம் காட்டுவது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு இடையூறு செய்வது பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பது இதன் மூலம் பொது ஜன அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சிப்பது இதுவே புது ஜன அபிப்பிராயம் என்று நீதிமன்றங்கள் அதிகார வட்டம் ஆளும் கட்சிகள் ஆகியவற்றை மறைமுகமாக மிரட்ட நினைப்பது இவை அனைத்தையும் செய்ய முடிந்தவர்கள் தான் மறைமுகமாக அனைத்தையும் ஆண்டு பொருள் ஈட்டி இதையே பிழைப்பாக கொண்டு சில கட்சிகள் தவறான வழியில் நாட்டை இயக்கி செல்கிறார்கள். இது நெடு நாட்களுக்கு ஓடாது. இதில் பிரதானமான கட்சிகள் கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வேலை இல்லாத நக்சலைட்டுக்கு நேரடியாக துணை போக முடியாத பல மறைமுக இயக்கங்களில் ஊதியம் பெறும் கூட்டங்களை கண்டு அரசு போலீஸ் எந்திரம் நீதிமன்றங்கள் அஞ்சக் கூடாது நம்முடைய ஒழுங்குமுறை நீதிமன்ற வழிமுறைகள் மாதிரி விஷயங்களை கட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு நம்முடைய போலீஸ் அரசு நீதி பரிபாலன நெறிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர முடியாத நிலையில் இதன் மறைமுக பிரபல தலைவர்கள் தீவிரவாதத்தை இயக்குபவர்களை அதற்கு உண்டான நிதிகளை முடக்கி கண்காணிக்க வேண்டும் . அல்லது விசேஷ சட்டங்கள் இயற்றி தலைவர்களை தண்டிக்க வேண்டும்.


M S RAGHUNATHAN
ஜூலை 22, 2025 19:42

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.அந்த உதயகுமார் என்ற போராளி, அங்கு இருக்கும்.கிருத்துவ சபைகளுக்கு எதிராக தொடர் ஆர்பாட்டம் நடத்துங்கள். உதயகுமாரை மற்றும். அந்த கிருத்துவ பாதிரியார்களை உள்ளே/வெளியே விடாதீர்கள். முற்றுகை போராட்டம் செய்யுங்கள்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 22, 2025 19:09

எங்கே போனார்கள் வைகோ கம்யூனிஸ்டுகள்.திரைப்பிரபலங்கள்.யாருமே இவர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படவில்லை


முக்கிய வீடியோ