உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,

தி.மு.க.,அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,

சென்னை: போலீஸ் நிலையத்தில் விவசாயி தீக்குளித்த சம்பவத்தை பார்க்கும் போது தி.மு.க., அரசு மீது கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,கூறினார்.அவரது அறிக்கை:தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த ஜெயராமன் எனும் விவசாயி தீக்குளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை. பச்சைத் துண்டுடுத்தும் விவசாயியை, தன் உயிரை விடத் துணிய வைத்த ஸ்டாலின் அரசு, தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.மேலும், ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞன் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாக செய்திகள் வருகின்றன.80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?குற்றவாளிகளுக்கு பயமில்லை; அரசு இயந்திரத்தின் மீது கடிவாளம் இல்லை- மொத்தத்தில் இந்த ஸ்டாலின் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தது தவறு தான் என்று தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் வருத்தமே படுகிறார்கள்!விவசாயி ஜெயராமன் உயிரைக் காக்க வேண்டும்; அவருக்கு நிவாரணம் வழங்கி, அவரின் குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும், ராணிப்பேட்டை மூதாட்டியை பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 12:29

திமுக அரசின் மீது திமுகவிற்கே நம்பிக்கை இல்லை ...போவீங்களா ...


ramesh
ஜூன் 04, 2025 22:00

தொடர்ந்து இதுவரையிலும் நடந்த கிட்டத்தட்ட பத்து தேர்தல்களில் dmk தான் வெற்றி பெற்று வருகிறது . ஒன்றில் கூட தாங்கள் வெல்லவில்லை . அப்படி இருக்க எப்படி வெக்கமே இல்லாமல் மக்களுக்கு dmk ஆட்சிமீது நம்பிக்கை இல்லை என்று கூறுகிறீர்கள் எடப்பாடி


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 05, 2025 12:30

தேர்தல் வரட்டும் பார்க்கலாம் ...


Ramesh Sargam
ஜூன் 04, 2025 21:42

குற்றவாளிகளை தண்டிக்கப்போனால், முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை