உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜவுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர்

பாஜவுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பாஜவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: ஒற்றுமை தான் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கு முதல்படி. முஸ்லிம்களுக்கு இடர் வரும்போது உங்களுக்கு துணை நிற்கும் முதல் அரசியல் இயக்கம் திமுக.. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உண்மையான தோழமை உணர்வோடு போராடியது. திமுக தான். அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உள்ளனரா எனக் கேள்வி எழுப்பியவர்களும். அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது யார் என்பதும் உங்களுக்கு தெரியும்.முத்தலாக் சட்டம் கொண்டு வந்த போது அதிமுக இரட்டை வேடம் போட்டதும் தெரியும். அதனால், தான், அன்வர்ராஜா போன்றவர் துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளை புறக்கணித்துவிட்டு திமுகவில் இணைந்தார்.வக்ப் சட்டத்திலும் அதிமுக கபட நாடகம் போட்டதை அனைவரும் பார்த்தனர். திமுக போராட்டத்தினால் தான் அந்த சட்டத்தின் முக்கிய திருத்தங்களுக்கு தடை வாங்கி உள்ளோம். பாஜவின் மலிவான சர்வாதிகார ஏதேச்சதிகார அரசியலுக்கு துணை செல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.காசாவில் நடத்தப்பட்டு வரும் துயரத்தைப் பார்த்து மனசாட்சி உள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ஆரூர் ரங்
செப் 22, 2025 15:31

பயங்கரவாத குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று திசை மாற்றிப்பேசி மத வெறி வாக்கு வங்கியை வாங்க முயற்சித்தது கேவலம்.


Saai Sundharamurthy AVK
செப் 22, 2025 12:40

இப்போது மக்கள் எல்லோருமே பாஜக பக்கம் தானே இருக்கிறார்கள்.......


V Venkatachalam
செப் 22, 2025 11:32

அன்வர் ராஜாவை இழுக்க என்ன வெல்லாம் செய்தீர்கள்ன்னு உணாமையை சொன்னா இவர்கிட்டே இருக்கிற ஆளுங்களே அன்வர் ராஜாவை தூக்கிபாபோட்டு சட்னி பண்ணிடு வாங்க. பேச்சு மாத்திரம் ரொம்ப யோக்கியன் மாதிரி பேச வேண்டியது. அன்வர் ராஜாவை பிடுங்கியாச்சுன்னா எடப்பாடி அரசியலை விட்டு ஓடிப்போய்டுவாருன்னு கணக்கு போட்டீங்க. அன்வர் ராஜா இன்னிக்கு தீயமுக வின் சாம்பார்ல ஒரு கறிவேப்பிலை. அம்புட்டுதேன்.


theruvasagan
செப் 22, 2025 10:50

ஊழலில் திளைக்கும் மற்றும் போலி மதச்சர்பின்மை பேசும் நபர்களை கட்சிகளை தலைவர்களை மக்கள் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.


பேசும் தமிழன்
செப் 22, 2025 07:46

பயங்கரவாதிகளுக்கு துணை போகும் இண்டி கூட்டணி ஆட்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணித்து வருகிறார்கள்.... அதனால் தான் தேர்தலில் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடிக்கிறார்கள்.


பேசும் தமிழன்
செப் 22, 2025 07:43

முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லீம் பெண்கள் பயன்பெறுவது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை. அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் போல் தெரிகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்ற போது உங்களுக்கு மனத்தில் ரத்தம் வரவில்லை. அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு மனது வலிக்கிறது? தீவிரவாதிகள் இன்னும் பிணைக்கைதிகளை விடுவிக்காமல் இருக்கிறார்கள். அது தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா ??


ராமகிருஷ்ணன்
செப் 22, 2025 07:16

டீவிக்க கட்சியால் திமுகவின் கிறுத்தவ ஓட்டுக்கள் புட்டுகிச்சா, அதான் முஸ்லிம் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் இருக்க திட்டம்.


Indian
செப் 22, 2025 07:01

மிக சரி ..உண்மை தான்


Barakat Ali
செப் 22, 2025 06:13

தூத்துக்குடி எம் பி மேல என்ன கோபம் ????


Modisha
செப் 22, 2025 05:54

ஆமாம் , தேச பக்தர்களை உங்களுக்கு பிடிக்காது . இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று சொன்னவனை தானே பிடிக்கும்.