உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்: இ.பி.எஸ்.,

தி.மு.க., அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்: இ.பி.எஸ்.,

சென்னை: 'வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த தி.மு.க., அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக தி.மு.க., அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது. ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த தி.மு.க., அரசு. வயிற்றுபசிக்காகவும்,நிவாரணத்திற்காகவும், தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த தி.மு.க., அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்பு நிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
டிச 04, 2024 16:43

உங்க கட்சிக்கும் இதே கதிதான்


Narasimhan
டிச 04, 2024 15:13

நீங்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவ்வளவு காலமாக ஒருவரையொருவர் பழி சொல்வதையே வேலையாக கொண்டுள்ளீர்கள். தூர் வார கூட செய்யாமல் ஆட்டயப்போட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த மானமுள்ள தமிழர்கள் இவற்றை மறந்து விட்டு குவாட்டருக்கும் பிரியாணிக்கும் வோட்டு போடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை