உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காத்திருப்பு போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்கள் கைது

காத்திருப்பு போராட்டம் நடத்திய மக்கள் நல பணியாளர்கள் கைது

சென்னை:பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே, காத்திருப்பு போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.மக்கள் நல பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த 1990ம் ஆண்டு, கருணாநிதி அரசால் பணி நியமனம் செய்யப்பட்டோம். அ.தி.மு.க., அரசு மூன்று முறை பணி நீக்கம் செய்தது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 2014 ஆக., 19ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பணி தொடர்ச்சி, பணிப்பாதுகாப்பு, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட, அரசு ஊழியர்களுக்கு உள்ள சலுகைகள் அனைத்தை யும் வழங்கி, மக்கள் நல பணியாளர்களை யும், அவர்களின் குடும்பத்தினரையும், தமிழக அரசு காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி