உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

திருவிழாவிற்கு அனுமதி: முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால் போலீசாரே செலவை ஏற்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆடி பெருந்திருவிழா நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், சூலுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்திருந்தார்.இந்நிலையில், 'கடந்த ஜூலை 7ம் தேதி அளித்த விண்ணப்பம், இதுவரை பரிசீலிக்கப் படவில்லை' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வி.எஸ்.உஷாராணி, காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் பிரதாப் ஆகியோர் ஆஜராகினர்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அனுமதி கோரி, ஜூலை 7ல் விண்ணப்பம் செய்துள்ளார். அதன் மீது, இதுவரை உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, திருவிழாவுக்கு தகுந்த நிபந்தனைகளுடன், சூலுார் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்களை பெற்றால், அவற்றை ஏழு நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்.விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.,க்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற கோவில்கள், சொற்ப நிதியை வசூலித்து, பூஜைகள், திருவிழாக்களை நடத்துகின்றன. விழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், வசூலித்த தொகையை வழக்குக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், கோவில் திருவிழா செலவை, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஏற்க வேண்டி வரும். விழா நடக்கும் நாட்களில், உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இம்மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

அப்பாவி
ஆக 07, 2025 19:00

நீதி மன்றத்தில் டிவிஷன் பெஞ்செல்லாம் தேய்ஞ்சா யார் பொறுப்பு?


V Venkatachalam
ஆக 07, 2025 16:35

போகிற போக்கை பாத்தா சென்னை உயர் நீதி மன்றம் சிறிது நாட்களில் காணாமல் போயிடும் போல இருக்கே. ஸ்டாலின் தான் வராரு. விடியல்தான் தராரு.


என்றும் இந்தியன்
ஆக 07, 2025 16:33

ஆனால் அந்த திருவிழா கிறித்துவ முஸ்லீம் மதத்தை சேர்ந்ததாக இருந்தால் உடனே அனுமதி என்ன திருட்டு திராவிட ஏவல் துறை சரிதானே


தமிழ்வேள்
ஆக 07, 2025 19:38

ஆப்ரஹாமிய மத திருவிழாவிற்கு அனுமதி என்பதே தேவையில்லை...கலவரம் செய்தால் கூட திராவிட போலீஸ் மதம் மாற்றி திராவிட அரசு முழு பாதுகாப்பு தரும்.....ஆனால் அடிபட்டு கதறும் ஹிந்து ஜனங்களை போலீஸும் தாக்கி பொய்கேஸ் போடும்... அண்ணாதுரை கருணாநிதி வகையறா காட்டிய மதசார்பற்ற வழி....


panneer selvam
ஆக 07, 2025 16:20

Great judgement with clear warning message by Madras High Court at the same time , they could advise the lower courts also not to warm of their seats


KRISHNAN R
ஆக 07, 2025 12:27

இது எல்லாம் துறையிலும் தான் இருக்கு...


Ramesh Sargam
ஆக 07, 2025 12:09

முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால்... ஆஹா என்னவொரு வார்த்தை. போலீஸார் மட்டுமா தமிழகத்தில் பெஞ்ச் தேய்க்கிறார்கள் ... அமைச்சர்கள் முதல், அதிகாரிகள்வரை எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். நீதிமன்றம் பொதுவாக எல்லா பெஞ்ச் தேய்ப்பவர்களையும் கடுமையாக கண்டிக்கவேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 07, 2025 11:34

மனு கொடுத்த மறுநாளே பரிசீலித்தோம் யுவர் ஹானர். மனுவுடன் முக்கியமான காந்தி படம் போட்ட பேப்பர் இணைக்கவில்லை யுவர் ஹானர். முக்கியமான பேப்பர் இல்லாமல் நாங்கள் கோயில் திருவிழாவிற்கு எப்படி செலவு செய்ய முடியும் யுவர் ஹானர்? புரிஞ்சுக்கோங்க யுவர் ஹானர்.


M Ramachandran
ஆக 07, 2025 11:29

இப்பொது இந்த திருட்டு கழகம் தமிழ்நாடு பதவியை பிடித்து உட்கார்ந்ததோ அப்போதையிலிருந்து காவல்துறமையை அடிமையாக்கி தங்கள் கட்சி ரவுடிகளுக்கு ஸலாம் போட வைத்து விட்டது. உண்மையயை நிலையை பல சினிமாவில் காவல் துறையை கேலி சித்திரமாக்கி காட்டிவருகிறார்கள். அதற்க்கு எதிர்ப்பும் காவல்துறையை காட்டுவதில்லை.


Parthasarathy Badrinarayanan
ஆக 07, 2025 11:27

செவிடன் காதுல ஊதிய சங்கு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 07, 2025 10:37

கும்பாபிஷேகம் கோயில் திருவிழாக்களுக்கு அறநிலையத்துறை உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு கிஸ்தி கட்ட வேண்டி உள்ளது. அது தான் தாமததிற்கு காரணமாக இருக்கலாம்.


V Venkatachalam
ஆக 07, 2025 16:32

உண்மைதான். திரூச்செந்தூர் ஸ்ரீ முருகன் கோயில் கும்பாபிஷேகம் செய்ய ரூ 400 கோடி கொடுக்க திரு சிவ நாடார் பட்ட பாட்டை பாத்து திருச்செந்தூர் முருகனுக்கே மயக்கம் வந்துட்டுதாம். இதுல மனுஷன் எம்மாத்திரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை