உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுகாதார நிலையங்களுக்கு டாக்டர்களை நியமிக்க அனுமதி

சுகாதார நிலையங்களுக்கு டாக்டர்களை நியமிக்க அனுமதி

சென்னை:தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட, அரசாணையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் புதிதாக, 28 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 22 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பல்வேறு பணி நியமனங்களுக்கான பரிந்துரைகளை தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் அனுப்பி வைத்தார்.அதை பரிசீலித்த அரசு, 78 டாக்டர்கள், 56 நர்ஸ்களை நிரந்தர நியமனம் செய்யவும், 400 மருத்துவ பணியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும், ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கான ஊதியம் மற்றும் இதர படி விபரங்களுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை