உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது

செல்வநிலை சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பேரூர் தாசில்தார் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: செல்வநிலை சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூர் தாசில்தார் ரமேஷ்குமார் மற்றும் கிராம உதவியாளர் சரவணன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.லியாய்சன் நிறுவனத்தின் பழனிசாமி என்பவர், செல்வநிலை சான்றிதழ் கேட்டு கோவை பேரூர் தாலுகா தாசில்தாரிடம் கடந்த ஜூன் 19 ம் தேதியன்று விண்ணப்பித்து இருந்தார். இந்த சான்றிதழ் தொடர்பாக தாசில்தாரை சந்தித்து தகவல் பெறும்படி நிறுவனத்தின் மேலாளர் ரஞ்சித்குமாரை அவர் அறிவுறுத்தினார். இதன்படி, கடந்த 15ம் தேதி ரஞ்சித்குமார், பேரூர் தாசில்தார் ரமேஷ்குமாரை, அலுவலகத்தில் சந்தித்து சான்றிதழ் குறித்து கேட்டறிந்தார். அப்போது சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என ரமேஷ்குமார் கூறினார். பிறகு மீண்டும் கடந்த 21, 24 ஆகிய தேதிகளில் ரஞ்சித்குமாரை தொடர்பு கொண்ட ரமேஷ்குமார், இன்று( ஜூலை 25) லஞ்சப்பணத்தை வழங்கி சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனையடுத்து, ரமேஷ்குமாரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் திட்டம் தீட்டினர். அவர்கள் அறிவுரையின்படி ரஞ்சித்குமார், தாசில்தார் அலுவலகத்தில் ரமேஷ்குமாரை சந்தித்தார். அப்போது லஞ்சப்பணத்தை, அருகில் நின்றிருந்த கிராம உதவியாளர் சரவணனிடம் கொடுக்குமாறு கூறினார். லஞ்சப்பணத்தை வலதுகையில் வாங்கி தனது வலது பேன்ட் பாக்கெட்டில் சரவணன் வைத்துக் கொண்டார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். இதனை பார்த்து லஞ்சம் வாங்கியவர்களுக்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கேயே சரவணக்குமாரின் வலதுகை, வலது பேன்ட் பாக்கெட்டில் பினால்ப்தலீன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் லஞ்சப்பணம் அவரது பாக்கெட்டில் வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரையும், லஞ்சம் வாங்கச்சொன்ன தாசில்தார் ரமேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R. THIAGARAJAN
ஜூலை 26, 2025 20:18

வருவாய்த் துறை என்பதை தெளிவுபடுத்தும் அரசாணை வேண்டும் நியாயமான வருவாய் அரசாங்கத்திற்க்கா? அல்லது நியாயமற்ற வருவாய் அதிகாரிகளுக்கா????


Vellingirisamy A
ஜூலை 26, 2025 13:37

போலி ஆவணம்ஆள்மாறாட்டம்தொடர்பாகமாவட்டபதிவாளரிடம்மனுகொடுக்கப்பட்டுதீர்ப்பும்வாங்கப்பட்டுள்ளது இதுதொடர்பாகபேரூர்தாலூக்கா அலுவகத்தில்பட்டாமாறுதலுக்கானவிண்ணப்பம்இரண்டுவருடமாகபோராட்டம்பற்பலகாரணங்களைகூறிமனுநிராகரிப்பு உங்களுடன் ஸ்டாலின்திட்டத்தில்மனுபடித்துபார்த்த அதிகாரி ஆன்லைனில்பதிவுசெய்யாமல்மேனுவுவல்மனுவில்சேர்க்ககூறி என்னை அனுப்பிவைத்தார் சர்வேமனுவும்அப்படியே எழுதினார்கள் அரசின்கவணத்திற்கு இந்தசெயல்சென்றடையவும்என்னைபோன்றோர்பாதிப்பிலிருந்துகாப்பாற்றவும்எனதுமனுசென்றடையவேண்டுகிறேன்மனு எண்2877131,2877133ஆகும்தினமலர்நாளிதழ்செய்தியில்இந்தசெய்திமுதல்வரின்பார்வைக்குகொண்டுசெல்லவேண்டுகிறேன்


J.dharman J.dharman
ஜூலை 26, 2025 10:57

ஒரு கூலி தொழிலாளியிடம் ரூபாய்5000/-லஞ்சம் வாங்கிய அந் மானங்கெட்ட கெட்ட தாசில்தார் சவுந்தரவல்லி நடு ரோட்டில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.


J.dharman J.dharman
ஜூலை 26, 2025 10:41

இது போன்று லஞ்சம் வாங்கும் ஒவ்வொரு அரசு அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்பு துறையினரும் கையும் களவுமாக பிடித்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். இதற்க்கு பொது மக்களும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.


Santhakumar Srinivasalu
ஜூலை 25, 2025 19:53

இவங்களுக்கு தான் அரசாங்கம் சம்பளம் தருகிறதே? அப்புறம் எதுக்கு இந்த பிச்சை எடுக்க வேண்டும்?


rajasekaran
ஜூலை 25, 2025 19:30

நான் ரயிலில் பயணம் செய்யும் போது ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தேன். அவர் ஒய்வு பெற்ற தாசில்தார். அவர் கூறுகையில் அவரது மேல் அதிகாரிகள் RDO DDO கலெக்டர் சென்னையிலிருந்து பல அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறை THASILDAR அலுவலகத்திற்கு வருவார்கள். நாங்கள் இவர்களுக்கெல்லாம் அவ்வப்போது பணம் கவரில் போட்டு கொடுப்போம். இது MINISTER வரை செல்லும். தமிழ்நாட்டில் எல்லா இடத்திலிருந்து ஓரு மாதத்திற்க்கு லட்சக்கணக்காக போகும். இதை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார். நாட்டில் லட்சக்கணக்கான பேர்கள் GOVT வேலை கிடைக்காமல் கம்பெனியில் வேலை செய்து கொண்டு கஷ்ட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். GOVT வேளையில் இருந்து கொண்டு லட்சக்கணக்கில் கையூட்டு பெற்று 100/95 பேர் இதை போல தான் சம்பாதிக்கிறார்கள். என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்களாவே திருந்த வேண்டும்.


rama adhavan
ஜூலை 25, 2025 21:52

மந்திரிகளை லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்படி கைது செய்ய முடியும்? அவர்களும் அரசின் பொது ஊழியர்கள் தானே? அவர்களையும் லஞ்ச வழக்கில் கைது செய்தால் தான் நாடு உருப்படும். இதற்கு குற்றவியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 25, 2025 19:19

திராவிட மாடல் லட்சணம்.


Abdul Rahim
ஜூலை 26, 2025 07:00

எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சம் வாங்குவது நிறுத்தமாட்டார்கள்


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2025 18:55

செல்வநிலை, பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் தாசில்டரிடம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று திமுக அரசே மக்களிடம் கூறுவது, மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும். பட்டா ரிஜிஸ்டர் செய்வதற்கு ரெண்டு லட்சம் ரூபாய், சொத்து வரி ரசீது கொடுக்க எழுபத்தைந்தாயிரம் ரூபாய், தண்ணீர், எலக்ட்ரிசிட்டி கனெக்ஷன் கொடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் என்று திமுக அரசே வெளிப்படையாக சொல்வது நல்லது. ஏனனில் சில இடங்களில் மேலும் அதிகமாக கேட்ப்பார்கள். லஞ்சம் திமுக அரசில் லீகல் செய்யப்பட்டுவிட்டது என்று ஒரு மசோதா நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பி வையுங்கள். என்னென்ன சேவைக்கு எவ்வளவு லஞ்சம் என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. இதே போல் பாஸ்போர்ட் வாங்க போலீசுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? அஜித்குமார் மாதிரி ஒருவரை போட்டு தள்ள எவ்வளவு? என்பதையும் தெரிவித்தால் நல்லது.


பாரத புதல்வன்
ஜூலை 25, 2025 18:27

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி... அதுக்கு இந்த லஞ்ச பெருச்சாளி தாசில்தாரே சாட்சி.... தீ மு க வின் கொள்கை புரட்சி.... தமிழக மக்கள் மத்தியில் மிரட்சி.... விரட்டி அடிப்போம் தி மு க கட்சி... எல்லோரும் ஒண்ணா சேருங்கள் மச்சி....!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை