உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீட்டர் அல்போன்ஸ் - கார்த்தி பேச்சு காங்., தொண்டர்களிடம் குழப்பம்

பீட்டர் அல்போன்ஸ் - கார்த்தி பேச்சு காங்., தொண்டர்களிடம் குழப்பம்

'மத்திய அரசுக்கு விஜய் நெருக்கமானவர்' என, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சும், 'ராகுலுடன் விஜய் பேசிய பின், கூட்டணி குறித்து தலைமையே முடிவெடுக்கும்,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தியும் பேசியது, அக்கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டி என, தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்கு, தி.மு.க., தலைமை சம்மதிக்காவிட்டால், ஆட்சியில் பங்கு தருவதாக கூறும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என, காங்கிரஸ் தலைமையிடம் சில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இ தனால், தி.மு.க., ஆதரவு, விஜய் ஆதரவு என, கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி உள்ளன. தமிழக காங்கிரசில் பிளவு ஏற்படாமல் இருக்க, கூட்டணி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூட்டணி சம்பந்தமாக, யாரும் பொது வெளியில் பேச வேண்டாம் என, டில்லி மேலிடம் உத்தரவிட்டுள் ளது. இந்நிலையில், யுடியூப் சேனலுக்கு, காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போ ன்ஸ் பேட்டி அளித்தா ர். அதில், ''காங்கிரஸ், த.வெ.க., கூட்டணி ஏற்படுமா? அதற்கு விஜய் தயாராக இருக்கிறாரா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு, அவர் கேட்காமல் கொடுக்கப்பட்டுள்ளது. ' 'அவர், மத்திய அரசுக்கு நெருக்கமானவர் என்பதாலேயே, கேட்காமல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், பா.ஜ.,வின் பிடி இன்னும் இறுக்கமாகி விட்டது. ' 'பா.ஜ.,வுடன் விஜய் முரண்டுபிடித்தால், சி.பி.ஐ., விசாரணை குற்றப்பத்திரிகையில் விஜய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கூடும். இந்த சூழலில், விஜயுடன் காங்கிரஸ் கூட் டணி ஏற்படுமா என பேசுவது தவறு,'' என தெரிவித்துள்ளார். அதே நேரம், காங்., - எம்.பி., கார்த்தி, ''ரா குல், விஜயிடம் பேசினார் என்பது உண்மை. கூட்டணி குறித்து ராகுல்தான் முடிவெடுக்க வேண்டும். நிச்சயம் ஆட்சியில் பங்கு கேட்போம். எல்லா கட்சிகளுக்கும், அதிக சீட்டுகளில் போட்டியிட ஆர்வமும், விருப்பமும் இருக்கிறது. ' 'கடந்த காலத்தில், 65 சீட்டுகளை வாங்கிவிட்டு, தற்போது 25 சீட்டுகள் வாங்கினால், அது எங்களுக்கு ஏற்பட்ட தோல்வி. கட்சியை பலப்படுத்தாமல் இருந்ததால் சீட்டுகள் குறைந்து விட்டன,'' என கூறி உள்ளார். ஒரே கட்சியில், இரு தலைவர்களும் விஜய் குறித்து வெவ்வேறு விதமாக கருத்து தெரிவித்திருப்பது, கட்சி தொண்டர்களிடம் மீண்டும் கூட்டணி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
அக் 25, 2025 09:36

கருணாநிதி தயவால் கல்வித்தந்தையானவர் பீட்டர் அல்போன்ஸ்.


sundarsvpr
அக் 25, 2025 09:24

மத்தியில் பி ஜெ பி உள்ளவரை ராகுல் ஒரு தலைவராக எவரும் கருதவில்லை. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமை தி மு க உள்ளவரை காங்கிரஸ் செல்லாக்காசு, ஆட்சியை பிடிக்க ஆசைப்பட்டால் மக்களிடம் செல்லுங்கள். பிடி அரிசி போதும் என்றால் ஸ்டாலினை ஒட்டி உறவாடினால் போதும்.


VENKATASUBRAMANIAN
அக் 25, 2025 08:42

பீட்டர் திமுக வில் சேர்ந்து விடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை