உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கல்லத்தி மரத்தில் பிறை கொடி ஏற்ற தடை விதிக்க கோரி மனு

 கல்லத்தி மரத்தில் பிறை கொடி ஏற்ற தடை விதிக்க கோரி மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியிலுள்ள ஸ்தல விருட்ச கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடியேற்ற அனுமதிக்க கூடாது என ஹிந்து மக்கள் கட்சி, திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள ஸ்தல விருட்ச கல்லத்தி மரம் தொன்மையானது. திருப்பரங்குன்றம் மலை, கிரி வீதிகளிலுள்ள அனைத்து மரங்களும் கோயிலுக்கு சொந்தமானவை என நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. மலை உச்சியிலுள்ள கல்லத்தி மரத்தில் கொடியேற்ற தர்கா நிர்வாகம் முயற்சி செய்கிறது. தர்கா வளாகத்திற்குள் அல்லது தர்காவின் முன்புறம் மட்டுமே கொடி ஏற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளை தவிர்க்கும் வகையில் மரத்தை சுற்றிலும் கோயில் நிர்வாகம் வேலி அமைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மனுவில் அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், ஆலய பாதுகாப்பு குழு நகர் தலைவர் முருகன், ஹிந்து ராஷ்டிர சபா கிருஷ்ணகுமார், மாவட்டத் தலைவர் முத்து சேர்வை, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு மதுரை மேற்கு மாவட்ட இணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ