உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி மீதான வழக்கில் விசாரணை கோரி மனு

மாஜி மீதான வழக்கில் விசாரணை கோரி மனு

சென்னை:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், மேல் விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால் வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் அமைச்சராக பதவி வகித்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 30க்கும் மேற்பட்டவரிடம், 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, புகார்தாரரான நல்லதம்பி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வரும் 21ம் தேதிக்குள் காவல் துறை பதிலளிக்கவும், வழக்கில் ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரரராக சேர்க்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ