உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் நெரிசல் பலி சிறப்பு அமர்வு அமைக்க மனு

கரூர் நெரிசல் பலி சிறப்பு அமர்வு அமைக்க மனு

சென்னை:கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு அமர்வை அமைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவையும் நியமித்துள்ளது. 'இந்த விசாரணை குறித்த அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யப்படாத சூழலில், உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு அமர்வுகளும், மாநில ஆணையங்களும் விசாரிப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை