வாசகர்கள் கருத்துகள் ( 2 )
sridhar
பிப் 21, 2025 13:18
மூர்க்ஸ் ?
Rogith K
பிப் 21, 2025 12:41
விடியலை அனுபவீங்க?
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சவுந்தரலிங்கபுரத்தில், விஜயன் என்பவரது வீட்டில் நள்ளிரவில் மர்மநபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மூர்க்ஸ் ?
விடியலை அனுபவீங்க?