உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருந்து நிறுவன பங்குகள் பறிமுதல்

மருந்து நிறுவன பங்குகள் பறிமுதல்

சென்னை:'அரவிந்த் ரெமிடிஸ்' மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் பிஷா. இவரும், அந்நிறுவனத்தின் பங்குதாரர்களும், பெயரளவில் செயல்படும் நிறுவனங்கள் பெயரில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 637 கோடி ரூபாய் உட்பட பல்வேறு வங்கிகளில், 704 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்தினர் . அதன் தொடர்ச்சியாக, அரவிந்த் பி ஷா மற்றும் அவரது நிறுவனத்தின் பங்குதாரர்கள், 637 கோடி ரூபாய்க்கு மோசடி செய்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. அவர்களுக்கு சொந்தமான, 15 லட்சம் பங்குகள் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி