வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது
சென்னை: தமிழக சுகாதார துறையில் 47 'பிசியோதெரபிஸ்ட்' பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 7.சுகாதார துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'பிசியோதெரபிஸ்ட்' கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி என்ன?
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை., மற்றும் கல்லூரியில் தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு
பொது பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 32, மற்ற பிரிவுக்கு வயது உச்சவரம்பு இல்லை.தேர்ச்சி முறை எப்படி?
தமிழ் தகுதி தேர்வு, ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு மையம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை
https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு ரூ.500
தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது