உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்குப் பின் இன்ப அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தீபாவளிக்குப் பின் இன்ப அதிர்ச்சி...தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை, தீபாவளி பண்டிகையை நெருங்கிய போது, புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் ரூ.59,000த்தை தாண்டியது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். கடந்த 3 நாட்களில் ரூ.1,120 உயர்ந்தது. தீபாவளி பண்டிகையான நேற்று ரூ.59,640க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கும், ஒரு கிராமுக்கு ரூ.70 சரிந்து ரூ.7,365க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.106க்கும், கிலோ ரூ.3 ஆயிரம் சரிந்து ரூ.1,06,000க்கும் விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R S BALA
நவ 01, 2024 15:57

இதுக்கு எதுக்குங்க மானம் ரோசம் எல்லாம் மிதமிஞ்சிய பணம் இருப்பவர்கள் வாங்கி குவிக்கிறார்கள்.. ஆனால் ஒன்று அவ்வளவு பணம் ஏது எங்கிருந்து என்றெல்லாம் கேட்கக்கூடாது.


Srinivasan Krishnamoorthi
நவ 01, 2024 12:35

மானங்கெட்ட மக்கள் விழுந்து விழுந்து வாங்கும் வரை தங்கம் விலை குறையாது இப்ப வெள்ளியில் இறங்கி விட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை