உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாராளமாக கொடி நாள் நிதி தாருங்கள்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தாராளமாக கொடி நாள் நிதி தாருங்கள்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நம் நன்றியையும், நல்வணக்கத்தையும் காணிக்கையாக்கும் வகையில், பெருமளவில் கொடி நாள் நிதி வழங்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள், டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் எல்லைகளையும், நம் சுதந்திரத்தையும் காக்கும் பணியில், எண்ணற்ற படைவீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கின்றனர்; எத்தனையோ ஆயிரம் வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்.

தனிமனிதரல்ல

எப்போதும் எத்தகைய துன்பம் வந்தாலும், சிறிதும் அஞ்சாமல் தங்கள் கடமையே பெரிதென்று எண்ணி பலர் பணியாற்றுகின்றனர். இவர்கள் தனி மனிதர்கள் அல்ல. தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பு ராணுவ வீரர்களுக்கும் உண்டு.அந்த பொறுப்பை, நாட்டு மக்கள் தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ராணுவ வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், பொருள் உதவியும், பிற உதவிகளும் செய்ய வேண்டும். இதை, கொடி நாள் அனைவருக்கும் நினைவூட்டுகிறது. பல திட்டங்களை வழங்கி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. எனவே, நடப்பாண்டு கொடி நாளிலும் பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நம் நன்றியையும், நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், கொடி நாள் நிதிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்கொடை வழங்கி, கொடி நாள் வசூலை துவக்கி வைத்தார்.

ரூ.67 கோடி வசூல்

மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தலைமை செயலர் முருகானந்தம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், முன்னாள் படைவீரர் நல இணை இயக்குனர் மேஜர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.தமிழகத்தில் கொடி நாள் நிதியாக, கடந்தாண்டு டிசம்பர் 7 முதல், நடப்பாண்டு டிசம்பர் 7 வரை, 67 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடந்த கொடி நாள் நிகழ்ச்சியில், முப்படைகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதில், இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார், முன்னாள் படை வீரர் நலத்துறை இயக்குனர் பவன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கவர்னர் ரூ.5 லட்சம்

கொடி நாளை முன்னிட்டு, கவர்னரின் விருப்ப நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கவர்னர் ரவி நேற்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த்திடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rafiq Ahamed
டிச 09, 2024 11:37

வருகிற 2026 சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அது உறுதி


Ramesh Sargam
டிச 08, 2024 13:28

அந்த கொடி நாள் நிதியிலும் ஆளும் கட்சியினர் ஆட்டைபோடாமல் இருக்கவேண்டும் இறைவா...


Raaj
டிச 08, 2024 11:57

நீங்கள் கொள்ளையடித்த பணம் மருமகன் கொள்ளையடித்த பணம் மகன் கொள்ளை அடித்த பணம் பல ஆயிரம் கோடிகளில் உள்ளது அவற்றிலிருந்து ஒரு ஆயிரம் கோடியை நீங்கள் தாராளமாக கொடுக்கலாமே.


ஆரூர் ரங்
டிச 08, 2024 11:44

இலங்கையிலிருந்து திரும்பிய IPKF அமைதிப்படை வீரர்களை கருணாநிதி வரவேற்கச் செல்லாமல் அவமதித்தது மறக்காது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:27

முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நம் நன்றியையும், நல்வணக்கத்தையும் காணிக்கையாக்கும் வகையில், தமிழர்களைக் கொன்றவர்களை வரவேற்கப் போகமாட்டேன்.. இந்த டயலாகையெல்லாம் மறந்துட்டேன் ....


Sundar R
டிச 08, 2024 10:16

கோயில் உண்டியலில் பணம் போட்டாலும், கொடி நாள் உண்டியலில் பணம் போட்டாலும், புயல் நிவாரண நிதி உண்டியலில் பணம் போட்டாலும், கட்சி நிதி உண்டியலில் பணம் போட்டாலும் அது எப்படியப்பா ஒரே குடும்பத்தைச் சென்றடைகிறது? பாரதத்தின் இதர மாநிலங்களில் இதுபோன்ற சிஸ்டம் இல்லையே


பாமரன்
டிச 08, 2024 09:50

இந்த அரசியல்வியாதிங்க ஆஊன்னா அவிங்க கட்சி கொடிகளை ரோட்டில் ஆக்கிரமித்து கட்டும் செலவை நிதியா கொடுத்தாலே பெரிய வசூல் வரும்... அதற்கு அச்சாரமா ஸ்டாலின் எதாவது சொல்லியிருந்தா பாராட்டலாம்... மற்றபடி இந்த ஸ்டேட்மெண்ட் இந்தியா வல்லரசாகும் ஸ்டேட்மெண்ட் மாதிரி இருக்கு... ஆனாலும் ஊடால ஊரான் வீட்டு காசை எடுத்து உண்டியல்ல போட்டுட்டு பேட்ஜ் குத்திக்கிட்ட லப்பர் இஷ்டாம்பு புத்திசாலி தான்....


Murugesan
டிச 08, 2024 09:44

இவங்க அப்பாக்கு சிலையும் சமாதி கட்ட நிதியாக போகும் ,நாட்டை பற்று இல்லாத அயோக்கிய கட்சி ஆட்சியில


Jay
டிச 08, 2024 08:45

வருடம் முழுவதும் பிரிவினைவாதத்தை பேசுவது, மத்திய அரசு செய்யும் எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் தடுத்து நிறுத்துவது என பல குடைச்சல்கள் கொடுத்தாலும் கருணாநிதி காலத்தில் இருந்து கொடிநாள் நிதி என்பதை தொடர்ந்து செய்து மக்களை குழப்புவது.....


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 08, 2024 08:21

உண்டியல்ல காசு போட்டால் கடமை முடிந்தது என்று நினைக்கும் திராவிடம். தமிழக இளைஞர்கள் அடிப்படை ஹிந்தி கற்றுக்கொண்டு அதிக அளவில் ராணுவத்தில் சேர்ந்து தேச பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.


முக்கிய வீடியோ