உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வாக்குறுதி என்று சொன்னீர்களே! மின் மீட்டர் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு அன்புமணி கேள்வி

தேர்தல் வாக்குறுதி என்று சொன்னீர்களே! மின் மீட்டர் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு அன்புமணி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு; தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் ப்ரீபெய்ட் மீட்டர் முறையையும் அறிமுகம் செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்க தமிழக அரசு மறுத்திருக்கிறது.போஸ்ட் பெய்ட் மீட்டர் முறையை மட்டுமே நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. நுகர்வோர் நலனுக்கு எதிரான திமுக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.ப்ரீபெய்ட் மீட்டர் முறையை செயல்படுத்த முடியாது என்பதற்காக இரு காரணங்களை தமிழக அரசு கூறுகிறது. முதலாவது, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அனைத்து நுகர்வோரும் ஏற்க மாட்டார்கள் என்பது. இரண்டாவது ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதாகும். இந்த இரு காரணங்களுமே ஏற்றுக்கொள்ள முடியாதவை.ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கருத்துக்கேட்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ப்ரீபெய்ட் முறையின் சாதகங்கள் எதுவும் இன்னும் மின் நுகர்வோருக்கு எடுத்துக்கூறப்படவில்லை. அதற்குள்ளாகவே ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுவது தவறு. அது மட்டுமின்றி, ப்ரீபெய்ட் மீட்டர் நடைமுறைக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்க முடியாது என்பதும் தவறு.இன்றைய தொழில்நுட்பத்தில் முதல் 100 யூனிட்டுகளுக்கு சுழியக் கட்டணம் என்று மீட்டரில் பதிவு செய்வதன் மூலம் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால், முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து வசூலித்து விட்டு, அதை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம். ப்ரீபெய்ட் மீட்டர் முறையில் பல நன்மைகள் உள்ளன. இந்த முறையில் மின்சாரக் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டு விடும் என்பதால் மின்சார வாரியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படாது. அதுமட்டுமின்றி, ஒரு மாதத்தில் குறிப்பிட்ட தேதி வரை எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியிருக்கிறோம்; நாம் செலுத்திய பணத்திற்கு இன்னும் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்பது நுகர்வோருக்கு தெரியும் என்பதால் அவர்கள் தேவையற்ற மின்சாரப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும். இது நுகர்வோர், மின்சார வாரியம் ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.2021ம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட பணியாளர்கள் தேவையில்லை. அதனால் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை மிச்சமாகும்.எனவே, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டரைப் பயன்படுத்தி, மாதாந்திர மின் கணக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அருணாசலம்
நவ 04, 2024 12:27

இம்மாதிரியான ஆக்க பூர்வமான செயல்பாடு நன்று. இதற்கு போராட்டம் நடத்தலாம்.


GMM
நவ 03, 2024 14:14

மொபைல் சேவையில் ப்ரீ - போஸ்ட் கட்டணம் உண்டு. BSNL selfcare. உள்ளது. விருப்ப போல் தேர்வு செய்ய முடியும். online கட்டணம் செலுத்த முடியும். மின் மீட்டரில் இதன் முறையை அமுல் படுத்த என்ன சிரமம்? அன்புமணி மருத்துவர். தொழில் நுட்ப விவரம் தருகிறார். திராவிடமே ஒன்றும் புரியாமல் சிறப்பில்லா ஆட்சி மீடியா ஆதரவு மூலம் செய்து வருகிறீர்?


raja
நவ 03, 2024 14:01

ஹையோ ஹையோ இது போல பல வாக்குறுதிகளை தமிழனை எனாற்ற உங்கள் தொகுதியில் கோமாளின்னு சொல்லிக்கிட்டு வந்த ஓங்கோல் திருட்டு திராவிட தெலுங்கன் சொன்னது ஐயா... அதெல்லாம் போயி பெருசா eduththukittu....


சாண்டில்யன்
நவ 03, 2024 13:28

லேண்ட்லைன் டெலிபோனுக்கு ரூ 2000 டெபாசிட் கட்டினோம் அது என்னானது யாராவது ரீபண்ட் பெற்றார்களா என்று தெரிந்தால் சொல்லலாம்


Kannan K S
நவ 03, 2024 13:50

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது BSNL லேண்ட் லைன் போனை சரண்டர் செய்தேன். டிபாசிட் தொகை ரூபாய் இரண்டாயிரம் முழுவதுமாக திரும்பக் கிடைத்து.


Anantharaman Srinivasan
நவ 03, 2024 14:13

Irrelevant question on this heading. டெலிபோன் டெபாசிட்டை திருப்பி வாங்கமுடியும்.


enkeyem
நவ 03, 2024 15:08

நான் ஈரோட்டில் பணிபுரிந்த சமயம் எனது வீட்டுக்கு BSNL லேண்ட் லைன் போன் 1995 முதல் பயன்படுத்தி வந்தேன். அதற்கு அப்போது நான் செலுத்திய டெபாசிட் தொகை ரூபாய் 500. பின் 2010ல் பணி ஓய்வுக்குப்பின்அதே போனை சத்யமங்கலத்திற்கு மாற்றி 2020 வரை பயன்படுத்தினேன். அதன் பின் FTTH கேபிள் மூலம் மாற்றக்கோரிய போது அதற்கு தனியாக மோடம் ONT பொறுத்த ரூபாய் 1500 செலுத்தினேன். அதற்கு தனி நம்பர் கொடுத்துவிட்டு ஏற்கெனவே பயன்படுத்திவந்த நம்பரை சரண்டர் செய்து விட்டு டெபாசிட் தொகை எனது கணக்கில் BSNL திருப்பி செலுத்திவிட்டது.


ஆரூர் ரங்
நவ 03, 2024 16:15

மின்சார இணைப்புக்கு வைப்புத் தொகை வசூலிக்கிறார்கள். நுகர்வு அதிகரித்தால் அவ்வப்போதே கூடுதலாக வாங்குகிறார்கள். ஆனால் தொடர்ந்து நுகர்வு குறைந்தால் அதற்கேற்ப திருப்பித் தந்த வரலாறு உண்டா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை