உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 வருஷம் ஆச்சு! டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

6 வருஷம் ஆச்சு! டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்காக 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது. அப்பணிக்கான போட்டித் தேர்வு வரும் 9ம் தேதி நடத்தப்படவிருக்கும் நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன் இதே பணிக்காக நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு 10.06.2018 போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. வழக்கமாக தேர்வு நடத்தப்பட்டு இரு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அதற்கு முழுக்க முழுக்க டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி. நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது முதல் தேர்வு நடத்தப்பட்டது வரை ஏராளமான குழப்பங்கள் நிகழ்ந்தன. அதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் விசாரணையை ஒத்தி வைக்கக் கோருவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் டி.என்.பி.எஸ்.சி. வழக்கை முடிவுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் எதிர்காலம் என்னவாகும்? என்பது தெரியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தமிழ்நாட்டில் மொத்தம் 190 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 4 இடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களும் காலியாகத் தான் உள்ளன. அதனால், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இப்போது 45 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், 110 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை வெளியிடாமல் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை தேர்வு செய்வது பல சிக்கல்களை உருவாக்கும். 6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவர்கள் பணியில் அமர்த்தப்படாமல், புதிதாக தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டால் யாருக்கு பணிமூப்பு வழங்குவது என்பதில் குழப்பம் உண்டாகும். அதைத் தவிர்க்கும் வகையில் 45 மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிப்பதற்கான தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே 2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட 110 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகளை அறிவித்து அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shunmugham Selavali
நவ 05, 2024 17:03

மருத்துவர் ஐயாவும் அவருடைய பாட்டாளி மக்கள் கட்சியும் அரசின் பல தவறுகளை சரியாக எடுத்து வைக்கிறார்கள். எதிர்கட்சி மற்றும் இதற கட்சிகள் அரசின் தவறுகளை பேசுவதில்லை, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்குவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் எந்த கூச்சமும் இல்லாமல் ஓட்டு கேட்கிறார்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 16:32

இவரோட பேச்சு அறிக்கை கூட போட வேண்டிய அவசியம் இல்லை. வேணும் னா ஒரு மாம்பழம் படம் போட்டு நியூஸ் போடுங்க.


mindum vasantham
நவ 05, 2024 16:14

most section officer working in secretriat themselves are frauds


முக்கிய வீடியோ