உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்

பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பாமக நிறுவனர் ராமதாஸ், 86. இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ராமதாசுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் டாக்டர்கள் பரிந்துரையின் பேரில், ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி வந்து இருந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று மாலை ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. அந்த ஆஞ்சியோகிராமில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஏதுவும் இல்லை. ராமதாசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் சொல்லி இருக்கின்றனர். மேலும் இரண்டு நாட்களுக்கு ராமதாஸ் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கிற மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றப்படி பயப்படுவதற்கு ஏதுமில்லை என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர். ஐசியுவில் ராமதாஸ் இருப்பதால் நேரில் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார். டாக்டர்களிடம் நான் பேசி உள்ளேன். 6 மணி நேரத்தில் ராமதாஸ் ஐசியுவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rajasekaran
அக் 06, 2025 10:41

சின்னவர் சென்று பெரியவரை ஐசியூவில் சென்று நேருக்கு நேர் சந்தித்தால் எதாவது நல்லது நடக்கும் என்று தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை