உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?

தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?

சென்னை: தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ம.க.,வை உள்ளே இழுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரிய காய் நகர்த்தலை, தி.மு.க., மேலிடம் துவங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முயற்சி பலித்தால், வரும் சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் தி.மு.க., கூட்டணி கணிசமான ஓட்டுகளை அள்ள முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் காங்., - வி.சி., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ம.ம.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு உதிரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.இந்த கூட்டணியை தக்க வைத்தாலே, ஓட்டு சதவீதம் அடிப்படையில் வெற்றி பெற்று விடலாம் என்பது தி.மு.க., மேலிடத்தின் கணக்கு.

மனக்கசப்பு

அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி பலவீனமாக உள்ளதும், ராஜ்யசபா 'சீட்' விவகாரத்தில் தே.மு.தி.மு.க.,வுக்கும், அக்கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு மற்றும் பா.ஜ.,வை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்னும் உறுதியான முடிவெடுக்காததும், தி.மு.க., கூட்டணியின் தேர்தல் வெற்றி கணக்கிற்கு சாதகமாக உள்ளன. இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், பொது நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, சட்டசபையிலும் தி.மு.க., அரசை விமர்சித்து, கருத்துகளை பதிவு செய்ய துவங்கி உள்ளார். ஏற்கனவே, ஆளும் கூட்டணிக்கு எதிராக திருமாவளவன் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், வேல்முருகனின் செயல்பாடு, கூட்டணிக்கு மேலும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது.கடந்த வாரம் சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அவமதித்து விட்டதாகக் கூறி, வேல்முருகன் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்த கருத்து, அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இதனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து, வேல்முருகனின் த.வா.க., வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அதே நேரத்தில் பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கான சாதகமான சூழலும் உருவாகிஉள்ளது.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஜாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தீவிர போராட்டம் நடத்தவும் அக்கட்சி தயாராகி வந்தது.ஆனால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் கூறிய அறிவுரையை தொடர்ந்து, இந்த விவகாரங்களில் பா.ம.க., கொஞ்சம் அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளது.

ரசித்தது

தலைமை செயலகத்தில் நடந்த லோக்சபா தொகுதிகள் மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்றார். இதை, தி.மு.க., தலைமை வெகுவாக ரசித்தது.எனவே, கூட்டணியில் குடைச்சல் ஏற்படுத்தி வரும் வேல்முருகனை வெளியேற்றி விட்டு, பா.ம.க.,வை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய பேச்சும் நடப்பதாக தெரிகிறது. மேலும், நடிகர் விஜயின் அரசியல் வருகையால், ஆதிதிராவிட மக்களின் ஓட்டு வங்கி, அவரது பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. பா.ம.க., வந்தால், கூட்டணியில் வி.சி., கட்சி இருக்க முடியாது.

கைகொடுக்கும்

அதற்கு பதிலாக, தே.மு.தி.க.,வில் உள்ள ஆதிதிராவிடர் ஓட்டு வங்கியை பயன்படுத்த, அந்த கட்சியை கூட்டணிக்குள் இழுக்கவும் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க.,வையும், பா.ம.க.,வையும் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் போன்றோரை வழிக்கு கொண்டு வர, இந்த வியூகம் கைகொடுக்கும் என்றும் கட்சி தலைமை நம்புகிறது.தி.மு.க., மேலிடம் நினைப்பது போல, கூட்டணியில் பா.ம.க., இணையுமானால், வட மாவட்ட வன்னியர்கள் மத்தியில் வலுவாக இருக்கும் அக்கட்சியின் ஓட்டுகளை முழுமையாக அள்ளி, பெரு வெற்றி பெற முடியும். இந்த அடிப்படையில் திட்டமிட்டுள்ள தி.மு.க., மேலிடம் காய்களை நகர்த்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Bhaskaran
மார் 26, 2025 13:03

உதயநிதி பாமக கட்சியை கூட்டணியில் சேர்க்கமாட்டார் தேமுதிக சேர்க்கலாம் அதிமுக பாஜக பாமக கூட்டணி விஜயை அமித்ஷா மூலம் நெருக்கடி கொடுத்து அதிமுக கூட்டணியில் 25 சீட் தரலாம் .அதிமுக 130 பாமக 25 பாஜக +தினகரன் +பன்னீர் 50 விஜய் 25+ பூவை மூர்த்தி+கிருஷ்ணசாமி கூட்டணி சேரலாம். விஜய் தனித்து நின்றால் காலி அல்லது திமுகவிடம் 20 சீட் வாங்கலாம்


Vijay D Ratnam
மார் 24, 2025 22:43

வெல்டன் இத இதத்தான் எதிர்பார்த்தோம். பாமகவும் விசிகவும் ஓரணியில் இருந்தாலே போதும், தொண்டர்கள் ஒருத்தனுக்கு ஒருத்தன் தெருநாய் அடிச்சிக்குவாய்ங்க. அதிமுகவுக்கு பாதி வெற்றி உறுதியாகிவிடும். திமுகவின் எதிர்வாக்குகளை மொத்தமாக அதிமுக பக்கம் சென்று விடாமல் தடுக்க 7-8 சதவிகித வாக்குகளை பிரிப்பதற்கு மாப்ள சபரீசன் பைனான்சில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி ஒரு பக்கம், அமித்ஷா கனிமொழி கள்ள கூட்டணியில் மலர்ந்த திமுகவுடன் கள்ள உறவில் இருக்கும் பாஜக ஒரு பக்கம் 4-5 சதவிகிதம் வாக்குகளை பிரிக்கும். இதன் மூலம் திமுக சுலபமாக வெற்றி பெறலாம். இப்போ பாமகவும் விசிகவும் ஒரு அணிக்குள் இருந்தால் ஆட்டமேட்டிக்கா வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு வரும்.


anonymous
மார் 24, 2025 22:31

பாமாகா தலைமையில் கூட்டணி. அன்புமணி - முதல் அமைச்சர் விஜய் பிரபாகர் -துணை மு. அமைச்சர் உ ஸ்டாலீன் - கஞ்சா ரசாயன பொடி அமைச்சர் கணிமொழி - சாராய அமைச்சர்.


எஸ் எஸ்
மார் 24, 2025 13:53

வேல்முருகன் என்ன அவ்வளவு பெரிய ஓட்டு வங்கியாளரா?


M Ramachandran
மார் 24, 2025 13:17

இந்த அரசியல் வாதிகள் மக்களை முட்டாளாக்க நினைகிறார்கள். அவர்கள் நினைத்தால் அவர்களுக்கு மக்கள் ஓட்டை போட வேண்டுமா. மக்கள் என்ன கிள்ளு கிரைய்யா?


Nallavan
மார் 24, 2025 13:12

அரசியல்ல இதல்லாம் ஜகஜமப்பா, யாருக்காவது ஜூடு, ஜூரனை இதல்லாம் இருந்தா , அரசியலை விட்டு போய்டுங்க ராசா


மோகனசுந்தரம் லண்டன்
மார் 24, 2025 12:48

இங்கு யாருக்கும் வெட்கமில்லை. முக்கியமாக பாமகவிற்கு.


Rajah
மார் 24, 2025 11:52

பழனிஆசாமி இருக்கும்வரை திமுகவுக்கு நல்லதே நடக்கும். இது தமிழர்களின் சாபக்கேடு. தமிழனை தெலுங்கர்கள் ஆட்சி செய்ய புரட்சி தமிழனின் ஆதரவு.


Haja Kuthubdeen
மார் 24, 2025 10:32

சரியான கற்பனை... வேல் முருகன் கட்சிக்கு ஒரு சீட்டுதான். பா ம கவை கொண்டுவரனும்னா 25 சீட் வேணும். பாமக வந்தால் வி.சி வெளியே.. வி.சி வெளியேறினால் இரு கம்யூனிஸ்டும் அவுட்.. பாமக அஇஅதிமுகவில் சேரத்தான் ஆர்வம் காட்டுவதே....


SP
மார் 24, 2025 09:44

யூகமாக செய்திகளை வெளியிடுவதில் தமிழக மீடியாக்களுக்கு போட்டி உருவாகியுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை