உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!

செல்வப்பெருந்தகை செய்த குழப்பம்: வி.சி.க., - காங்கிரஸ் இடையே புகைச்சல்!

சென்னை: பா.ம.க.,வை இண்டி கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சி கவலை அளிப்பதாக மதுரை வி.சி.க., எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது இண்டி கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பா.ம.க.,வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கட்சிக்குள் யாருக்கு அதிகாரம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, நிர்வாகிகளை மாறி மாறி நீக்கியும், சேர்த்தும் வருகின்றனர். குறிப்பாக, கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, பா.ம.க., கூட்டணி விஷயத்தில் அன்புமணியின் தலையீடே தோல்விக்கு காரணம் என்று ராமதாஸ் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dlwi7fuj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதாவது, அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல தான் விரும்பியதாகவும், அன்புமணியின் கட்டாயத்தின் பேரில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, அக்கட்சியை தங்களின் கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சமீபத்தில் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸை நேரில் சென்று சந்தித்தார். கூட்டணி பற்றி பேசியதாகவும் தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், '2014ம் ஆண்டு முதல் மோடியுடன் இணைந்து கொண்டு, தற்போது வரையில் அவரது கொள்கைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு கட்சியை உங்களின் கூட்டணி கட்சியாக்க எப்படி நீங்கள் விரும்ப முடியும்? அனைத்து சூழ்நிலைகளிலும் உங்களுடன் துணை நின்றவர்களை ஏன் காயப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போராட்டங்களிலும் மக்கள் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். இது கட்சியின் கருத்து அல்ல. சொந்த கருத்து,' இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு வி.சி.க., எம்.பி.,யும் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.அதில், ' வி.சி.க., எப்போதும் மாநில மற்றும் தேசிய அளவில் இண்டி கூட்டணிக்கு விசுவாசமாக இருந்து வருகிறது. அண்மையில் திருச்சியில் 'மதச்சார்பின்மையை காப்போம், அரசியலமைப்பைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் பிரம்மாண்டமான ஊர்வலத்தை நாம் நடத்தினோம். அனைத்து நேரங்களிலும் ராகுலுடன் உறுதியாக நின்றுள்ளோம்.இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி, என்.டி.ஏ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியை (பா.ம.க.,) இண்டி கூட்டணிக்கு இழுக்கும் முயற்சி கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்த முயற்சி, தி.மு.க., தலைமையிலான கூட்டணி, பா.ஜ., கூட்டணியை எதிர்க்க போதுமான வலிமையுடன் இல்லை என்பதைப் போல உள்ளது. இதற்கு உங்களின் ஒப்புதல் பெறப்பட்டதா?' என்று கேள்வி எழுப்பினார். இதன் மூலம், பா.ம.க.,வை தி.மு.க., கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக வி.சி.க., குற்றம் சாட்டியுள்ளது. இது, இண்டி கூட்டணியிலும், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RVR
ஜூலை 04, 2025 20:28

தினமலர் சூப்பர்


RAMESH
ஜூலை 04, 2025 15:08

இவர்கள் எலும்பு துண்டுக்கு அலையும் மிருகங்கள்.....வெருமா...எதற்கு வேண்டுமானாலும் தயாராக இருக்கும் நன்றி கெட்ட......... பச்சோந்தி போல் பேசும் நபர்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 04, 2025 12:14

ராமதாஸ் ஐயாவிற்கு ஒரு கோரிக்கை , ப்ரோக்கர்கள் , அடிமைகளை இனம் காணுங்கள் , நேற்று வந்த சீமானும் யோசித்து முடிவெடுக்கையில் நீங்க அடிமை கூட்டத்தில் ஒதுங்குவது சரியா , அடிமைகளுக்கும் புரோக்கர்கள் இருப்பார்கள் என்பதனை காங்கிரஸ் தலைவர் காட்டுகிறார் , நீங்க உணராமல் இருப்பது வேதனை


Arjun
ஜூலை 04, 2025 11:47

இவர்கள் திமுகவிற்குதான் விசுவாசமாக உள்ளார்கள் ,தமிழக மக்களுக்கு அல்ல மக்கள்தான் எப்பொழுதும் எஜமானர்கள் . வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு புரிய வைப்பார்கள்.


Thravisham
ஜூலை 04, 2025 11:45

பெருந்தொகை விளையாட்டுகளில் இதுவும் ஓன்று.


சமீபத்திய செய்தி