உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

அத்துமீறி நடந்து கொள்ளும் போலீஸ்: மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''போலீசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். விசாரணை என்ற பெயரில், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கொடூரமான தாக்குதல் நடத்துவது, என்கவுன்டர் செய்வது கடும் கண்டனத்துக்குரியது,'' என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்கவுன்டர், லாக் அப் மரணம், விசாரணையின் போது நடந்த மரணம் என 24 சம்பவங்கள் உள்ளது. போலீசார் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர விசாரணை என்ற பெயரில், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கொடூரமான தாக்குதல் நடத்துவது என்கவுன்டர் செய்வது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமான போலீசார் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்லிக்கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடப்பது போலீஸ்துறைக்கு பெருமை சேர்க்கும் விஷயம் அல்ல. போலீசார் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். மாறுவதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இத்தகைய கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ்துறைக்கு முதல்வர் தான் பொறப்பு என்பது உலகறிந்த விஷயம். பல போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்கிறோம்.நான் மழுப்பலாக சொல்லவில்லை. இது மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை. போலீசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். அதில் மார்க்சிஸ்ட் சமரசம் செய்து கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கண்ணன்
ஜூலை 01, 2025 12:36

பஹல்காம் தாக்குதலுக்கு அமித் ஷாவைப் பதவி விலக வற்புறுத்திய வாய் இப்போது ஏன் பம்முகிறது? உண்டியல் நிரம்பியதா?!


suresh Sridharan
ஜூலை 01, 2025 08:12

அடிமைக்கு எதற்கு இந்த ஆதங்கம்


Kasimani Baskaran
ஜூலை 01, 2025 04:00

மானங்கெட்ட கம்ம்யூனிஸ்ட் கோஷ்டி பெட்டி வாங்கிவிட்டபடியால் பெட்டிப்பாம்பாக மரியாதையுடன் பேசுவார்கள். இது போன்ற தேசவிரோதிகளை நாடு கடத்த வேண்டும்.


S.kausalya
ஜூன் 30, 2025 22:32

காவல் துறையை தனது கட்டுபாட்டில் வைத்து இருக்கும் ஸ்டாலினிடம் கேளுங்கள்.நீங்கள் வானத்தை பார்த்து அல்லது குட்டி சுவரை பார்த்து கேட்பது போல் உள்ளது.


சுரேஷ் பாபு
ஜூன் 30, 2025 21:31

அடேங்கப்பா - என்னா ஒரு தில்லாலங்கடிப் பேச்சு? இத்தனை லாக்கப் மரணங்களும் பொறுப்பு ஏற்று போலிஸ் துறை அமைச்சர் - அதாவது முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பேசத் துப்பில்லை - உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? எதற்கு இந்தக் கபட நாடகப் பேச்சு? இன்னும் எவ்வளவு நாள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தப் போகிறீர்கள்?


முருகன்
ஜூன் 30, 2025 21:00

எவ்வளவு கத்தினாலும் 6 சீட் மட்டுமே கிடைக்கும்


Velayutham rajeswaran
ஜூன் 30, 2025 20:21

சீக்கிரம் தண்ணி வைங்கப்பா


Manaimaran
ஜூன் 30, 2025 20:16

சரி ஒரு சீட்டுப் ஒரு பெட்டியும் கூடுதல வாங்கிட்டு கம்னு இரு


kr
ஜூன் 30, 2025 19:53

Hundi donations konjam paathukonga


Kjp
ஜூன் 30, 2025 19:03

ஐயோ சண்முகத்துக்கு வீரம் வந்துருச்சு என்ன ஆகப்போகுதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை