உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியை பாலியல் வன்முறை செய்தது ஒருவரே போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

மாணவியை பாலியல் வன்முறை செய்தது ஒருவரே போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

சென்னை:''அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது ஒருவர் தான்,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.நேற்று அவர் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை மாணவி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள், குற்றம் செய்த நபரை கைது செய்தோம்.

வழக்கு பதிவு

புலன் விசாரணையில், மாணவியை பாலியல் வன்முறை செய்தது ஒருவர் தான்; வேறு நபருக்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மாணவி புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கக் கூடாது. இவ்வாறான குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை, எந்த விதத்திலும் அடையாளப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடக்கூடாது. காவல் துறைக்கு தரப்படும் புகாரில் கூறி இருக்கும் தகவல்களை, அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். அதில் நாங்கள் எவ்வித அடித்தல், திருத்தலும் செய்யக்கூடாது. அந்த வகையில், மாணவி அளித்த புகாரில் கூறிய தகவல்கள், எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டன. காவல் துறையில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை, சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகுதான், நீதிமன்றங்களுக்கு அனுப்ப வேண்டும்.புகார்தாரருக்கும் ஒரு நகல் தர வேண்டும். எப்.ஐ.ஆரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது, பாலியல் தொடர்பான குற்றமாக இருந்தால், தானாகவே 'லாக்' ஆகிவிடும்.இந்த எப்.ஐ.ஆர்., சில நிமிடங்கள் பார்க்கும்படி இருந்துள்ளது. அந்த சமயத்தில், யாரோ பதிவிறக்கம் செய்துள்ளனர். புகார்தாரர் தரப்பிலும், எப்.ஐ.ஆர்., வெளியில் வர நேர்ந்திருக்கலாம்.எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம் தொடர்பாக, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மிகவும் சென்சிட்டிவான விவகாரம் தொடர்பாக, இனி எவரும் எப்.ஐ.ஆர்., நகலை பரப்பக் கூடாது. மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்தேகம்

கைதான ஞானசேகரன், சம்பவ இடத்தில் மொபைல் போனை, 'ஏரோபிளேன் மோடில்' வைத்துள்ளார். முதல் தகவல் அறிக்கையில், 'சார்' என்ற வார்த்தை பயன்படுத்தி இருப்பதால், வேறு நபர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் எழுப்பப்படுகிறது. மாணவியை மிரட்டவே, ஞானசேகரன் அதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். அவர் மீது, 2013 - 2019 வரை, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, 20 வழக்குகள் உள்ளன. அதில், ஆறு வழக்கில் விடுதலை பெற்றுவிட்டார். இதற்கு முன், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, வழக்கு எதுவும் இல்லை. அவருக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் வகையில், ஏற்கனவே பதிவு செய்த எப்.ஐ.ஆரில், புதிய சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை வளாகத்தில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த, 142 காவலாளிகள் பணியில் உள்ளனர். '70 சிசிடிவி'க்கள் உள்ளன. அவற்றில், 56 செயல்பாட்டில் உள்ளன. அங்கு போலீஸ் ரோந்து பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து, பாராட்டும் விதமாக துணிச்சலாக புகார் அளித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் யார் பாதிக்கப்பட்டாலும், காலம் தாழ்த்தாமல் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gokul Krishnan
டிச 28, 2024 21:12

குற்றவாளி ஒருவனா ஒரு சாரா ரெண்டு சாரா மோரா என்று கண்டு அறிய வேண்டியது நீதி மன்றம் உங்கள் வேலை இல்லை அது எப்படி சார் ஞானசேகரன் சொகுசு காரில் கால் நீட்டி உட்கார வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்துனீர்கள்


Kumar Kumzi
டிச 28, 2024 15:28

இந்த கேடுகெட்ட முகத்துலயே தெரியாது இவன் திமுக ரவுடி பயல் என்று


கல்யாணராமன் சு.
டிச 27, 2024 20:15

சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு சில கேள்விகள்: 1 அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது ஒருவர் தான், என்று எப்படி உறுதியாக சொல்கிறார் ? சம்பவ இடத்தில் அவரோ, அவரது துறையினரோ இருந்தனரா ? 2 "மாணவி புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கக் கூடாது." அப்படின்னுதான் எல்லோரும் சொல்றாங்க ..நீங்க என்ன புதுசா சொல்லிட்டிங்க? 3 அதுக்கு பிறகு நீங்க சொன்ன எல்லாம் "SOP" எனப்படும் standard operating procedure ... அது ஏன் பின்பற்றப் படவில்லை என்பதுதான் இங்க கேள்வியே 4 "இந்த எப்.ஐ.ஆர்., சில நிமிடங்கள் பார்க்கும்படி இருந்துள்ளது. அந்த சமயத்தில், யாரோ பதிவிறக்கம் செய்துள்ளனர்." அப்படின்னு சொல்ற நீங்க அதை இத்தனை நேரம் கண்டுபிடித்திருக்க வேண்டுமே நீங்கதான் ஸ்காட்லாந்து யார்ட் ஆச்சே ? 5 "புகார்தாரர் தரப்பிலும், எப்.ஐ.ஆர்., வெளியில் வர நேர்ந்திருக்கலாம்." அப்படின்னு புதுக்கதையை ஏன் கெளப்பறீங்க ? 6 "எப்.ஐ.ஆர்., கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் உறுதி" - எப்ப சார் ? 7 "கைதான ஞானசேகரன், சம்பவ இடத்தில் மொபைல் போனை, ஏரோபிளேன் மோடில் வைத்துள்ளார்." எப்படி சார் அப்படி ரொம்ப உறுதியா சொல்றீங்க? 8 "மாணவியை மிரட்டவே, ஞானசேகரன் அதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்." - அப்படின்னு யார் சொன்னாங்க ? அவரே சொன்னாரா ?


அப்பாவி
டிச 27, 2024 19:20

வெக்கக்.கேடு. இன்னும் அந்த ஆடி கார் யாருதுன்னு கண்டுபிடிக்கத் துப்பில்லை.


அப்பாவி
டிச 27, 2024 19:18

அந்த sir ஐக் கண்டுபிடிக்க நாளக்கி கெவுனர் ஆய்வு நடக்கப் போகுது.


நிக்கோல்தாம்சன்
டிச 27, 2024 05:56

அப்போ அந்த சார் நீங்க தானா அருண் , இப்படி வக்காலத்து வாங்கறீங்க ? pdf போர்மட் இல் இருக்கும் அந்த fir பற்றி அண்ணாமலை அய்யா கேட்டது இப்போ நிரூபணம் ஆயிட்டு , எதை மறைக்க , யாரை காக்க இப்படி ஒரு நாடகம் என்று கேள்வி இப்போ அப்பட்டமா எழுது , தமிழகம் இருண்ட காலத்தில் தான் இருக்கிறது என்னதான் தமிழக ஊடக மாபியா குடும்பம் மாற்றி மாற்றி சொன்னாலும் அவர்களின் பணவெறி அப்பட்டமா வெளியே தெரியுது , பிகாரி பிரஷாந்த் கிஷோர் ஒழிக


Mani . V
டிச 27, 2024 05:50

அரசியல்வியாதிகளுக்கு ஸாரி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை வருவதால் ஐயா இப்படி கூவி உள்ளார் - மேலிட உத்தரவுப்படி. வெகு விரைவில் இந்த விசுவாச கட்சி தொண்டருக்கு ஸாரி அதிகாரிக்கு பதவி உயர்வு உண்டு.


சமீபத்திய செய்தி