உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல் பணித்திறனாய்வு போட்டி

காவல் பணித்திறனாய்வு போட்டி

சென்னை: தமிழக காவல் துறை சார்பில், மாநில அளவிலான காவல் பணித்திறனாய்வு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, இன்று (நவ.,18) டி.ஜி.பி., அலுவலகத்தில் நடந்தது. தமிழக காவல் துறை சார்பில், கடந்த, செப்., 8 – 25ம் தேதி வரை, சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள, காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயிற்சி மையத்தில், மாநில அளவிலான காவல் பணித்திறனாய்வு போட்டி நடந்தது. இதில், 47 பெண் போலீசார் உட்பட, 368 போலீசார் மற்றும் 68 மோப்ப நாய்கள் பங்கேற்றன. போலீசாருக்கு, அறிவியல் ரீதியிலான புலனாய்வு, காவல் ஒளிப்பதிவு, நாசவேலை தடுப்பு சோதனை உட்பட, ஆறு தலைப்புகளில், 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மோப்ப நாய்களுக்கு, துப்பறியும் போட்டியும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 21 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாநகர போலீசார், காவல் துறை புகைப்பட போட்டியில் முதல் இடத்தையும், அறிவியல் ரீதியிலான புலனாய்வு மற்றும் காவல் ஒளிப்பதிவு போட்டியில், மூன்று கோப்பைகளையும் வென்றனர். மோப்ப நாய் போட்டிகளில், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி முதல் இடத்தையும், சென்னை மாநகரம் இரண்டாம் இடத்திற்கான கோப்பையையும் பெற்றன. பதக்கங்கள் வென்ற போலீசாரை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், இன்று நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை