உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படுகொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடுத்தடுத்து நடந்தது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vst0mk2e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்நிலையில் இன்று மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இவர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.கொல்லப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், போலீசாரை தாக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஏப் 01, 2025 04:03

பிரபலமாக அப்படி என்ன செய்தார் என்று விலாவாரியாக நினைவுத்தூண் வைத்திருக்கலாம்...


Srinivasan Ramabhadran
மார் 31, 2025 21:59

தயவுசெய்து ரவுடிகளை "பிரபல " ரவுடி என்று குறிப்பிடுவதை தவிர்க்கவும். தேவையானால் மோசமான அல்லது பயங்கரமான ரவுடி என்று குறிப்பிடவும். இப்போது இந்த என்கவுண்டர் மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்து எந்த மனித உரிமை ஆர்வலர்களும் பேச ஏன் வரவில்லை.


ராஜன்
மார் 31, 2025 21:48

இவன் மீது பல குற்றங்கள் இருக்கும்போது எப்படி ஜமின் கொடுத்து வெளியே விடுகிறார்கள். நீதி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கை இழக்கும். பல குற்றங்கள் நிலுவையில் இருக்கும்போது சிறையில் இருக்க வேண்டியவனை வெளியே விடாமல் இவனுக்கு தண்டனை கொடுத்து இருக்கணும்.


Appa V
மார் 31, 2025 21:25

பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இவர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.... 1960 களில் அரசாங்கம் பள்ளிக்கூடங்கள் திறந்து வைப்பதில் கவனம் செலுத்தின. ரவுடிகள் ஊருக்கு வெளியே சாராயம் விற்றார்கள் .. திராவிட ஆட்சியில் அரசாங்கம் ஊருக்குள்ளேயே சாராயம் விற்பனையில் மும்முரம் ...ரவுடிகளும் தாமூக விரோதிகளும் கல்வி தந்தைகளாகி வருகின்றனர்


lana
மார் 31, 2025 21:24

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பதை மடை மாற்ற இந்த encounter. இப்படி தான் ஆம்ஸ்ட்ராங் கொலை இன் போதே நடந்தது


Chandrasekaran
மார் 31, 2025 21:13

Thanks TN police its the best punishment


மனி
மார் 31, 2025 21:07

இது போல ஆரம்பத்தில் இருந்தே நடந்து இருந்தா சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை