உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணை அடிப்படையில் பணி போலீஸ் வாரிசுகள் காத்திருப்பு

கருணை அடிப்படையில் பணி போலீஸ் வாரிசுகள் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணியின் போது உயிரிழந்த போலீசாரின் வாரிசுகள் 707 பேர், கருணை அடிப்படையிலான பணிக்காக காத்திருக்கின்றனர்.பணியின் போது உயிரிழந்த போலீசாரின் மகன், மகள் என வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், தகவல் பதிவு உதவியாளர், அலுவலக உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ல், தகவல் பதிவு உதவியாளராக 1,480 பேர்; அலுவலக உதவியாளராக 56 பேர்; தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளராக தலா ஒருவர் பணியமர்த்தப்பட்டனர்.ஆனால், தகுதி இருந்தும் போலீசாரின் வாரிசுகள் 707 பேருக்கு, கருணை அடிப்படையில் இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்கள் பணிக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'கருணை அடிப்படையிலான பணியை பெற, எங்களின் தந்தை, தாய் பணியின் போது இறந்த விபரங்கள், எங்களின் கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை, அரசிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் சமர்ப்பித்துள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 10:43

மனிதபிமானமற்ற ஐ டி கள் வன்மம் கக்குகின்றன. உதாசீனப்படுத்தி விட்டு கடந்து செல்வதே நல்லது. விகார மனமும் வக்கிர புத்தியும் கொண்டவர்களின் பேச்சுக்களை விலக்கி விட வேண்டும்.


Barakat Ali
நவ 19, 2024 09:56

அதென்ன கருணை அடிப்படையில் போலீசு குடும்பம், அரசு ஊழியர்கள் குடும்பம் மட்டும்?? மத்தவனெல்லாம் வயித்துல ஈர துண்டை சுத்திக்கிட்டு கெடக்கணுமா ????


Nallavan
நவ 19, 2024 07:42

இறந்தவர்களின் தொழிலாளி ,விவசாயி மகனுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுக்கலாம், அரசு ஆலோசிக்கலாம்


R.RAMACHANDRAN
நவ 19, 2024 06:58

கருணை அடிப்படையில் வேலை என்பது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு லஞ்சம்/மாமூல் பெற்று சில தலைமுறைகள் உழைக்காமல் உண்ணும் அளவிற்கு சொத்து சொத்து சேர்த்தவர்களுக்காக அல்ல என்பதை மறந்துவிட்டார்கள் இந்த நாட்டில்.


புதிய வீடியோ