உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sengalipuram
நவ 10, 2025 13:02

ஒருவன் நல்ல அல்லது கெட்ட செயலை செய்வதற்கு முன் அவனுக்கு மனதளவில் தையிர்யம் அளிப்பது , அந்த செயலின் பக்க விளைவுகளை தாங்கி பிடிக்க வேறு ஒருவன் இருக்கிறான் என்னும் போதுதான். நடப்பது ட்ராவிடின் மாடல் ஆட்சி .. நீங்களே புரிந்துகொள்வீர்கள் ..


Ahamed
நவ 10, 2025 12:56

சரியாக சொன்னார் திரு அண்ணாமலை


திகழ்ஓவியன்
நவ 10, 2025 12:43

போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை