உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்

போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை இன்று (ஜூலை 08) ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்தார்.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் அறிக்கையை தாக்கல் செய்தார். ''அஜித்குமார் மரண வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மீதி விசாரணையை சி.பி.ஐ., மேற்கொள்ளும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.சி.பி.ஐ., ஒரு வாரத்தில் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஆகஸ்ட்20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

P.Sekaran
ஜூலை 08, 2025 17:27

உண்மையில் நகை தொலைந்து விட்டதா? தொலைந்த நகை கிடைத்துவிட்டதா? அதை பற்றி தெரியவில்லை. உண்மையில் நகை தொலைய வில்லை. அவன் தள்ளு வண்டி கூலி தகராறு மட்டும் காரணமா வேறு காரணம் உள்ளதா? எல்லாவற்றையும் சிபிஐ தான் விசாரிக்கணும். புகார் கொடுக்காமல் பெரிய் இடத்தில் சொல்லி யாரை வேண்டுமானாலும் அடித்து சித்ரவதை செய்யலாமா? சரியான உண்மை வெளிபடுமா?


D.Ambujavalli
ஜூலை 08, 2025 16:57

நகை என்று எதுவுமே இல்லை இருந்த பொருள் ‘வேறு ஒன்று’. அது காணாமல் போன பதற்றத்தால்தான் அந்த நிகிதா அங்கும் இங்கும் அலைபாய்ந்து அந்தக் காவலாளியை பலிகடா ஆங்கிவிட்டார் என்றும் ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது சிபிஐ அறிக்கை வந்தவுடனே தண்டனை கொடுத்துவிடுவார்களா? அந்தக் காவலர்களின் மனைவிகள் கூறியதுபோல். ‘மேலே இருந்து’ உத்தரவிட்டனர், அந்தப்பெண்மணி யாரும் விசாரிக்கப்படாமல் ஆச்சு போச்சு என்று கேஸை மூடிவிடுவார்கள் அல்லது, தந்தை- மகன் மரணம், கள்ளக்குறிச்சி வரிசையில் இதையும் சேர்த்து கேஸுக்கும் 10 திதி கொண்டாடிவிடுவார்கள்


Chandru
ஜூலை 08, 2025 16:41

These are happening for a big change in the State of Tamilnadu.


Padmasridharan
ஜூலை 08, 2025 15:15

கரை படிந்த காக்கிச்சட்டைகள், நிறைய பேர் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை அவர்களெடுத்து பஞ்சாயத்து பாதுகாப்பு என்ற பெயரில் பணமாக /பொருளாக மாற்றுகின்றனர். குற்றங்களை மறைத்து புதிய குற்றவாளிகளை உருவாக்குகின்றனர். இதன் உச்சம்தான் இந்த மரணம். யார் யார் என்ன செய்கிறார்களென்று அவரவர்களுக்கே தெரியும். அரசு வேலை, சம்பளத்துடன் தற்பொழுது மாமூல் பணமும் வசூலிக்கின்றனர். காரிலிருந்த நகைகள் எங்கே சாமி, அப்படியே கிடைத்தாலும் பங்குபோட பார்த்தார்களா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை