உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதியை தாக்கிய போலீஸ் டிஸ்மிஸ்

கைதியை தாக்கிய போலீஸ் டிஸ்மிஸ்

கூடலுார்: கூடலுார் கிளை சிறையில் கைதியை தாக்கிய சிறை காவலர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை, பாடந்துறையை சேர்ந்த நிஜாமுதீன், 33, போதை பொருட்கள் வைத்திருந்ததாக ஏப்ரலில் தேவர்சோலை போலீசாரால் கைது செய்து, கூடலுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த நிஜாமுதீனுக்கும், சிறை போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக, கூடலுார் துணை சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகியோர் ஏப்., 16 தேதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சிறை காவலர்கள் மீது கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக, துறை ரீதியான விசாரணை மேற்கொண்ட சிறை துறை அதிகாரிகள், காவலர் கோபியை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்ற போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

m.arunachalam
ஆக 24, 2025 12:25

பிடிபட்டது போதை பொருட்கள் விஷயம். அடங்காமல் திமிர் பேசினால் பொண்ணு கொடுத்து மருமகனுக்கு கொள்ள வேண்டுமா?


Kanns
ஆக 24, 2025 08:53

Good Decision But Is it for Appeasing Minorities?


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 24, 2025 10:59

எனக்கும் அந்த சந்தேகம் தான். அடித்த அடியால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவருக்காக டிஸ்மிஸ் என்றால் சிறையில் அடிபட்டே இறந்தவர்களுக்காக பணியிடை நீக்கம். காரணம் அடிபட்டவர் இஸ்லாமியர், அடித்தே கொல்லப்பட்டவர் இந்து. ஒரு நாள் இதற்கெல்லாம் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்....!!!