உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை அறிக்கை:தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் தி.மு.க.,வின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வது, கடுமையான கண்டனத்துக்குரியது. https://x.com/annamalai_k/status/1935686977678156116தனது தேர்தல் வாக்குறுதி எண் 389ல், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, மொத்தம் 20 ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியிருந்ததை, நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தற்போது இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வரவிருப்பதால், குழப்பமான ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது திமுக அரசு.இந்த அரசாணையின்படி, கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவல்துறையினருக்கு, எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்கு, மொத்தம் 23 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும், 2011 ஆம் ஆண்டுக்கு முன்பாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மொத்தம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தவா நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்வி, காவல்துறையிடையே எழுந்துள்ளது. இந்தத் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க, தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததைப் போல, காவல்துறையினரின் மொத்த பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மொத்தம் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், இன்னும் தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூன் 20, 2025 14:19

நானும் ரௌடி தான், பார்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து விட்டாரே, பாவம்!


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 09:57

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தைசெய்துதான் கழகம் அரசியல் செய்கிறது


V Venkatachalam
ஜூன் 19, 2025 22:46

திருட்டு தீயமுக காரன்களுடைய ஒரே பலம் கையில் வைத்திருக்கும் கள்ள பணம் தான்.‌அதை பிடுங்கி விட்டு நடுத்தெருவில் நிற்க வைத்தால்தான் இவன்களின் கொழுப்பு அடங்கும். வேறு எதனாலும் இவன்கள் கொழுப்பு அடங்காது.. அல்லது இலங்கையில் மக்கள் ராஜபக்ஷ வை துரத்தி அடித்த மாதிரி இவன்களை அடித்து துரத்தினால் மட்டுமே இவன்கள் அடங்குவான்கள்..


mindum vasantham
ஜூன் 19, 2025 21:33

home ministry section officer கிங்ஸ்லி எனும் fraud உள்ளார்


Ramesh Sargam
ஜூன் 19, 2025 20:40

திமுக தலைவர்களுக்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுக்கமட்டும்தான் தெரியும். தேர்தலில் வென்று ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறந்துவிடுவார்கள். நாம் ஒருவேளை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினாலும், அப்படி எதுவும் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை என்று உறுதியாக மறுப்பார்கள். ஜூன் 22 மதுரையில் திமுக எனும் சூரனின் சம்ஹாரம். ஒன்று கூடுவோம் மக்களே. திமுக எனும் சூரனை சம்ஹாரம் செய்வோம். வாருங்கள் முருக பக்தர்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை