உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்!

சீமானுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்!

சென்னை: ஈ.வெ.ரா., குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வடலூர் போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே ஈ.வெ.ராவையும், அவரது பேச்சுக்களையும் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கு திராவிட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமானைக் கண்டித்து போராட்டங்களும் நடத்தப்பட்டது. அவரது வீட்டையும் முற்றுகையிட முயன்றனர். இதனிடையே, கடலூர் மாவட்டம் வடலூரில் ஈ.வெ.ரா., குறித்து பேசிய சீமான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்குச் சென்ற வடலூர் போலீசார் சம்மனை வழங்கினர். அதில், வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Suppan
பிப் 10, 2025 15:56

எப் ஐ ஆரை பதிவு செய்ய வைத்து ராம் சாமியின் பெயரை மேலும் சேதப்படுத்த முயற்சி. நடக்கட்டும்.