உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; வாலிபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பண்ருட்டி அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சுந்தரவேலை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.வழக்கில் அவரை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால் சுட்டுப்பிடித்தனர். இதனால் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

இபிஎஸ் கண்டனம்

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5jwdpti6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழகம் எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை. https://x.com/EPSTamilNadu/status/19348787358929595946 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, 'அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய' அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த தி.மு.க., ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். இது போன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, போலீசாரை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026ல் இந்த தி.மு.க., அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Natchimuthu Chithiraisamy
ஜூன் 19, 2025 17:57

EPS பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக குற்றவாளிக்கு கட்டு போட்டார் அதிலிருந்து ஒரு மாதம் குற்றமே இல்லை. ஒரு சிறுவன் மற்றவனை துப்பாக்கியால் சுட்டு விட்டான். நீதிபதி சொல்லுகிறார் சிறுவன் பாத்ரூமில் வழுக்கிவிழ போகிறான் என்று. அது செய்தியில் வந்தது. அந்த நீதிமான் சமுகத்திற்கு பேராபத்து.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 10:18

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது ..


Siva Balan
ஜூன் 18, 2025 07:15

கஞ்சா விற்பது திமுகவினரின் தொழிலாக மாறிவிட்டது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், கஞ்சா விற்கும் திமுகவினரை காட்டி கொடுக்கும் மக்களை கொலை செய்வது மட்டுமே போலிஸின் வேலை.


முருகன்
ஜூன் 17, 2025 23:05

விவேக் காமெடி மாதிரி சுட வேண்டும் அப்போது தான் திருந்துவார்கள்


V Venkatachalam
ஜூன் 17, 2025 21:34

இது பிரியாணி ஞானசேகரன் விவகாரம் இல்லீங்கோ.அதனால சுட்டு பிடிச்சாட்டோங்க. மத்தபடி இது ரெகுலர் சமாசாரம்தாங்கோ..


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 20:28

சுட்டுப் பிடிக்கப்பட்ட சுந்தரவேல் முருக பக்தனா?


Ramesh Sargam
ஜூன் 17, 2025 20:10

தமிழகத்தில் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் பாலியல் வன்கொடுமை என்பதுபோய், இப்பொழுது மூதாட்டிகளுக்கும் பாலியல் தொல்லை. முதல்வரை கேட்டால் இதெல்லாம் எதிர்கட்சியினரின் புரளி என்று கூறி தப்பித்துவிடுவார். துப்புக்கெட்ட திமுக ஆட்சி.


sankaranarayanan
ஜூன் 17, 2025 19:04

திராவிட மாடல் அரசின் அரசாட்சியை போதையில் ஆடிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு இதுவே ஒரு சாலச்சிறந்த உதாரணமாகும் இன்னும் வேறு என்னைய்யா வேண்டும் விரைவிலேயே கமலைப்போட்டு ஆறு முதல் என்பது வரை என்று ஒரு படம் எடுக்கலாமே


சிட்டுக்குருவி
ஜூன் 17, 2025 18:11

இனிமேல் இந்த அரசை போதை அரசு என்றே கூறலாமா ? போதை அரசில் இதுபோன்ற அவலங்கள் இல்லாமல் வேறு என்ன எதிர்பாக்கமுடியும் . மக்களை மக்களே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் .


Haja Kuthubdeen
ஜூன் 17, 2025 17:24

இங்கே ஒருத்தன் மூர்கன் ரோஹங்கியான்னே உலக விசயத்தில் புலம்பிட்டு திரிவானே..உள்ளூர் பிரட்சினை பற்றிலாம் பேசமாட்டானா??


புதிய வீடியோ