உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கு மனித உரிமை பயிற்சி அளிக்க வேண்டும்

போலீசாருக்கு மனித உரிமை பயிற்சி அளிக்க வேண்டும்

மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் அணையை கட்ட, தமிழக அரசு அனுமதிக்காது; அணை கட்டவும் விடமாட்டோம். சட்டம் ஒழுங்கு பிரச்னையில், திசை திருப்பும் வகையில், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நுாலகங்களில் நடந்த ஊழல், மோசமான முன்னுதாரணம். இந்தியாவில் இது போன்ற அறிவியல் ரீதியான ஊழல் நடந்தது இல்லை. காவல் நிலைய மரணங்கள் நிகழக்கூடாது. விசாரணைக்கு அழைத்து செல்வோரின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும். போலீசாருக்கு மனித உரிமை பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். தமிழக உரிமைகள் தொடர்பாக, முதல்வர் விஜய் நாளை டில்லி சென்று பேச உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ