உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனித மிருகங்களாக மாறிய போலீஸ்: தி.மு.க.,-எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ்

மனித மிருகங்களாக மாறிய போலீஸ்: தி.மு.க.,-எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ்

திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:காவல் துறை என்ற பெயரில் மனித மிருகங்களாக மாறி, அஜித்குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கின்றனர். ஒரு திருட்டு வழக்கை இப்படி தான் விசாரிக்க வேண்டுமா? மனித உயிர் மீது அக்கறை இல்லாத, குரூர புத்தி உடைய தமிழக காவல் துறையை சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறது அரசு. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் கழிப்பறையில் வழுக்கி விழுவரா அல்லது தப்பி ஓடினர் என்று சொல்லி, 'என்கவுன்டர்' செய்யப்படுவரா?

சாமானியனுக்கு ஒரு நியாயம்; காவல் துறைக்கு ஒரு நியாயமா?

எப்படி பார்த்தாலும் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி, ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது. கட்சியில் யாரும் தவறு செய்தால், நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல் கூட, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், காவல் துறை மீது மட்டும் ஏன் இந்த மென்மை போக்கு? இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 17:03

கிறிஸ்தவர்களால் அமைந்த ஆட்சி. ஜார்ஜ் பொன்.


Kjp
ஜூலை 02, 2025 09:26

இனிக்கோ இதயராஜ் தைரியமாக ராஜினாமா பண்ணுங்க. அரசுக்கு உரைக்கட்டும்.


Padmasridharan
ஜூலை 02, 2025 08:43

காவலர்களின் சீருடையை தவறாக பயன்படுத்தி அதிகார குற்றங்கள் செய்வதே முதலில் இவர்கள்தான். இறப்பு மட்டுமல்ல, ஒருமையில் பேசுவது, மிரட்டியத்து பணம்/பொருள் புடுங்குவது, வண்டியில் கூட்டி அழைத்து அறைக்குள் காமத்தொல்லைகள் தருவது என்று பலவும் நடந்துகொண்டிருக்கின்றது


subramanian
ஜூலை 02, 2025 08:23

டேய் போதும்டா உங்க நாடகம்.


raja
ஜூலை 02, 2025 07:20

மாத்துனது உன் கேடுகெட்ட இழிபிறவி


Svs Yaadum oore
ஜூலை 02, 2025 07:11

சிறுபான்மை விளக்கெண்ணெய் இயக்கம் நடத்தும் இந்த ஆள் இந்த ட்வீட் டெலீட் செய்து விட்டு கோழையாக ஓட்டம் ....


xyzabc
ஜூலை 02, 2025 06:29

தேர்தல் நேரத்தில் மக்கள் இதை எல்லாம் மறந்து விடுவார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 02, 2025 06:28

ஆட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது என்பதனை தமிழக மக்கள் உணரும் காலத்தில் எல்லாம் அடங்கும்


Mani . V
ஜூலை 02, 2025 04:39

"இந்த காவல்துறைக்கு பொறுப்பான மந்திரி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்று சொல்லுங்கள் இனிகோ இருதயராஜ்.


Svs Yaadum oore
ஜூலை 02, 2025 07:12

பதவி விலகனுமா?? ..ஏற்கனவே எழுதியத்தைக்கூட டெலீட் செய்து விட்டு ஓட்டம் ...


முக்கிய வீடியோ