உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை காவலர். இவரது மனைவி பாண்டிச்செல்வி 33. இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி இறந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=niy47pav&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விடுமுறையில் இருந்த மலையரசன், மார்ச் 18 ல் மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பெருங்குடி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் எஸ்.ஐ., மாரி கண்ணனை வெட்ட முயன்று தப்ப முயற்சிக்கும்போது துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Chinnamanibalan
மார் 24, 2025 14:16

பெரும்பாலான ஊடகங்கள், என்ன செய்கின்றன என்பதே தெரியவில்லை. ஒன்றுக்கும் உதவாத செய்திகளை பெரிது படுத்துவதும், உண்மையான செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும், சமீப காலமாக பெருமளவில் நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது.


Thanu Srinivasan
மார் 24, 2025 12:47

மூவேந்திரன் போலீஸ்காரரை ஏன் எரித்து கொன்றான் என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லையே? ஏன்


அப்பாவி
மார் 24, 2025 11:16

இவ்ளோ பெரிய மாவுக்கட்டு போட்டு மருத்துவ தொழிலையே அவமதிக்கிறாங்க.


SRIRAM
மார் 24, 2025 10:49

இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர் எஸ்.ஐ., மாரி கண்ணனை வெட்ட முயன்று தப்ப முயற்சிக்கும்போது துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்டவரிடம் எப்படி அருவா வந்தது..... கை விலங்கு போடலையா..... படத்தில திரை கத சரியில்லப்பா...


panneer selvam
மார் 24, 2025 16:11

As per Supreme Court guidelines , you can not put handcuff to anyone in public . If any police do it , then they have to face contempt of court . We are not USA .


பேசும் தமிழன்
மார் 24, 2025 08:46

பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... ஏற்கெனவே பிடித்த ஆளை.... சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது வெட்டுவதற்கு அரிவாள் எங்கே இருந்து வந்தது? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று கூறுவார்கள். ஆனால் விடியல் போலீஸ் புளுகு முதல் நாளே வெளிப்பட்டு நிற்கின்றது.


Nedumaran
மார் 24, 2025 11:09

இதுதான் கிராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை