உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிபி அலுவலகம் முன் வி.சி தாக்குதல்: கத்தியை வீசி விரட்டிய அரசியல் தலைவர்

டிஜிபி அலுவலகம் முன் வி.சி தாக்குதல்: கத்தியை வீசி விரட்டிய அரசியல் தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னையில், டி.ஜி.பி., அலுவலகம் அருகே, புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் மூர்த்தி என்பவரும், வி.சி., கட்சியினரும் மோதிக் கொண்டது குறித்து, குறித்து மெரினா போலீசார் விசாரித்து வருகின்றனர்.மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகம் அருகே, புரட்சி தமிழகம் என்ற கட்சியின் தலைவர் மூர்த்தி என்பவர், நேற்று நின்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே சென்ற வி.சி., கட்சியைச் சேர்ந்த சிலர், திடீரென அவர் மீது காலணிகளை வீசினர்.அதை தடுக்க மூர்த்தி முற்பட்டார். இதை பார்த்த டி.ஜி.பி., அலுவலக பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் தடுக்க முயன்றார்.ஆனாலும், இருதரப்பினரை தடுக்க முடியவில்லை. அப்போது, வி.சி., கட்சியினர் கோஷமிட்டபடியே மூர்த்தியை தொடர்ந்து தாக்கினர்.இதையடுத்து மூர்த்தி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வி.சி., கட்சியினர் மீது வீச துவங்கினார். அவர்கள் தப்பி ஓடினர்.இந்த மோதலில் வி.சி., கட்சியைச் சேர்ந்த மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.சம்பவம் குறித்து இரு தரப்பினரின் புகாரையடுத்து, மெரினா போலீசார் விசாரித்து வருகின்றனர்.புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் மூர்த்தி, அவரது 'யு டியூப்' சேனலில், வி.சி., தலைவர் திருமாவளவன் குறித்து அடிக்கடி அவதுாறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும், அதற்காக மூர்த்தி மீது வி.சி., கட்சியைச் சேர்ந்தோர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வேடிக்கை பார்க்கிறதா அரசு? டி.ஜி.பி., அலுவலக வாயிலில், ஒரு அரசியல் கட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்துவதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு. தி.மு.க.,வின் கூட்டணி கட்சி என்றால், அவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட காவல் துறை அனுமதிக்குமா? - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ., ஏட்டளவில் சட்டம் - ஒழுங்கு ஒரு கட்சி தலைவர் மீது, வி.சி.,யினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது. நேற்று, ஒரு பேரூராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த நிலையில், இன்று, காவல் துறை அலுவலகம் அருகில், மற்றொரு கட்சி தலைவரை தாக்கியிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏட் டளவில் கூட இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. - நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ., எதை விரும்புகிறது அரசு? இச்சம்பவம் மூலம், கலவரம் நடப்பதையும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதையும் காவல் துறை விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. பொதுவாழ்வில் ஈடுபடும் மக்கள் பிரதிகளுக்கே உரிய பாதுகாப்பில்லாத தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும். - சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நா.த.க., கைது செய்ய வேண்டும் பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மூர்த்தியை தாக்கியோரை உடனே கைது செய்ய வேண்டும்; அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். - அன்புமணி , தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

V Venkatachalam
செப் 07, 2025 20:22

இந்த மூர்த்திக்கு முன் யோசனை பத்தாது. குருமாவை பத்தியும் மீதி இருப்பவங்க எப்பேர்ப்பட்ட அயோக்கியனா இருப்பாய்ங்க ன்னு கணித்து அதற்கு தகுந்த மாதிரி துப்பாக்கியோட வந்திருக்கணும். கத்தியெல்லாம் எம்மாத்திரம்?


திகழ்ஓவியன்
செப் 07, 2025 12:16

கத்தி வேறு வைத்து இருக்கும் இவன் தலைவன் இவன் பிஜேபி உடன் கூட்டணி வேறு


அயோக்கிய திருட்டு திராவிடன்
செப் 07, 2025 12:35

உம்மைப் போன்ற அயோக்கியர்கள் நிறைந்துள்ள தமிழகத்தில் கத்தியை மறைத்து வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


திகழ்ஓவியன்
செப் 07, 2025 13:26

கண்டிப்பா பிஜேபி உடன் கூட்டு ஆயிற்றே கண்டிப்பா வெச்சி இருக்கணும் தான் , சரி நீ வெச்சிகொண்டு இருக்க இல்ல


K V Ramadoss
செப் 08, 2025 19:05

ஓவியர் கூற்றுப்படி, எத்தனை தாக்குதல் வந்தாலும், வரும் என்று தெரிந்தாலும், முரட்டுக்கட்சியினர் மாறி மாறி தாக்கினாலும், தற்காப்புக்காக எதுவும் வைத்திருக்கக்கூடாது, தாக்குதலுக்கு அடிபணிய வேண்டும் ..அப்படித்தானே ஓ ஓவியர் அவர்களே..


Padmasridharan
செப் 07, 2025 11:54

எல்லா பழய கட்சிகளுக்கும் விடை கொடுக்க வேண்டும். காவலர்கள் மக்களை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள். எப்போ லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள் ஒழிகிறார்களோ அப்பொழுதே விடியல். இல்லையெனில் மூன்றாம் உலகப் போர் வரவேண்டும்.


rasaa
செப் 07, 2025 11:07

எங்கள் தலைவரின் ஆணைப்படியே நடப்போம். அடங்க மறு. அத்து மீறு. நாசமா போ.


rasaa
செப் 07, 2025 11:06

எங்கள் தலைவரின் ஆணைப்படியே நட


R VENKATARAMANAN
செப் 07, 2025 10:43

This is not a stray incident. There is no security for anyone and everyone in Tamil Nadu whenever the DMK forms the Government..The center also behaves like a silent spectator. The center should take firm action by suspending the ministry under Article 365. The Prime Minister should an emergency like Indira Gandhi at the time of her election verdict at the Allahabad Court. She was really bold and action-oriented.


mohana sundaram
செப் 07, 2025 12:38

Nowadays it is not at all possible to implement article 365 because there is Supreme Court which is ready to support the dissolved government.


s.sivarajan
செப் 07, 2025 09:55

தீயினார் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு . அரசியல் மேடைகள், சோசியல் மீடியாக்களில் யாரும் எப்படி வேண்டுமானாலும் கேவலமாக பேசக்கூடிய நாகரிகமற்ற நிலை உள்ளது.


ஆரூர் ரங்
செப் 07, 2025 09:50

ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் 10 கிரிமினல் வழக்காவது வாங்க வேண்டும் எனப் பேசி ரவுடித்தனம் செய்யத் தூண்டி விட்டது திருமா. அவர்தான் முக்கிய குற்றவாளி. ஆனால் அவரை கோர்ட் ஒண்ணும் செய்ததில்லை. செய்யாது. வில்சன் சிபல் அவர் பக்கம்.


Pandi Muni
செப் 07, 2025 16:09

எவ்வளவு நாட்களுக்கு குளிர் காய திருமாவளவனால் முடியும்


Kanns
செப் 07, 2025 09:11

Encounter All Political Party Rowdies esp RulingPartyAllies PowerMisusing ExtortionLoot Goondas. AllCourts Must Punish AllRank PoliceOfficials Licking RulingParties


K V Ramadoss
செப் 08, 2025 19:09

Court ? which court ? now a days the courts also want to do adventurism... by supporting rowdist parties..


KOVAIKARAN
செப் 07, 2025 09:00

இந்த வீடியோவைப் பார்த்தால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. அதாவது, காவல்துறை, அரசியல் ரவுடிகளுக்கு அஞ்சுவது மட்டுமின்றி, மிக்க மரியாதையும் கொடுக்கிறது என்று. என்ன ஒரு தைரியம் அல்லது இறுமாப்பு இருந்தால் இந்த அரசியல் ரவுடிகள் DGP அலுவலகம் முன்பே எந்த ஒரு தயக்கமும் பயமும் இல்லாமல் இவ்வாறு ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்குவார்கள்? ஒருவேளை புதியதாக நியமிக்கப்பட்ட, தற்காலிக காவல் துறை தலைவர் தனது அரசுக்கு நன்றிக்கடனுக்காக காவல் துறைக்கு இது போன்ற சமயங்களில் அந்த அரசியல் ரவுடிகளை மெண்மையாக கையாள வேண்டுமென்று உத்தரவு போட்டிருப்பாரோ? இது போன்ற கன்றாவியான வீடியோக்களையும் செய்திகளையம் நாம் பார்க்கவேண்டும், படிக்கவேண்டும் என்பது எல்லாம் நமது தலை எழுத்து போலும்? இந்த ரௌவுடிகளின் ஆட்சியில் நாம் எப்போது நிம்மதியாக இருக்கப்போகிறோம்?


சமீபத்திய செய்தி