உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமச்சீர் விகிதத்தில் வருவாய் பகிர்வு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சமச்சீர் விகிதத்தில் வருவாய் பகிர்வு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: 'சமச்சீர் விகித முறையில், மாநிலங்களுக்கு வருவாய் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்' என, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், 16வது நிதிக்குழுவிடம் வலியுறுத்தினர்.

அதன் விபரம்:

அ.தி.மு.க., - ஜெயகுமார்: வருமான வரி, சுங்க வரி போன்ற வகைகளில், மாநிலங்களில் இருந்து மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் சீரான முறையில், சமச்சீர் விகிதத்தில் பிரிக்கப்பட வேண்டும்.மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வில், உத்திர பிரதேசத்துக்கு 17; தமிழகத்துக்கு, 4.7 சதவீதம் நிதி வழங்கப்படுகிறது. இது, வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு தண்டனை அளிப்பது போல உள்ளது. எனவே, சமச்சீர் விகிதத்தில் நிதி பகிர்வு வேண்டும். பா.ம.க., - பாலு: தமிழகத்துக்கான நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என, தேசிய நிதி குழுவிடம் பா.ம.க., சார்பில் வலியுறுத்தினோம். கட்சி தலைவர் அன்புமணி எழுதிய கடிதத்தை வழங்கினோம். மாநிலங்களுக்கு, 50 சதவீதம் நிதி பகிர்வு வேண்டும்.மா.கம்யூ., - சச்சிதானந்தம்: தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மத்திய அரசு விற்கும் பங்குகளின் வருவாயில், மாநில அரசுகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ