வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்... இரவுஸபகலாக உணவு இல்லாமல் உழைத்த தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
சிவகாசி: இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி சிவகாசியில், 370 கோடி ரூபாய்க்கு மேல் காலண்டர் வர்த்தகம் நடந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு, 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 15 முதல் 2,500 ரூபாய் வரை பல்வேறு விதங்களில் அவை கிடைக்கின்றன.இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், 2026 ஜன., 20 வரை, 'ஆர்டர்' பெறப்படும். மேலும், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் கூடுதலாக ஆர்டர் கொடுத்துள்ளதால் 5 சதவீதம் தயாரிப்பு அதிகரித்துள்ளது.இதனால் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ள நிலையில், இந்த ஆண்டு, 370 முதல் 380 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்... இரவுஸபகலாக உணவு இல்லாமல் உழைத்த தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்