உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத அடையாளத்தை வைத்து அரசியல்: அமைச்சர் மகேஷ்

மத அடையாளத்தை வைத்து அரசியல்: அமைச்சர் மகேஷ்

கோவை: கோவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:பள்ளிகளில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். சில நேரங்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை கூட ஏற்படுகிறது. இதனால் தான், மாணவர்கள் மத அடையாளங்களோடு பள்ளிக்கு வருவது கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. உடனே, இதை வைத்து சிலர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர்.ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை இருக்கிறது. அதை யாரும் குறைசொல்ல முடியாது; அதில், தலையிடவும் முடியாது. ஆனால், பள்ளி என்பது பொதுவான இடம். முற்போக்கு சிந்தனையுடன் கல்வி கற்றுக்கொடுக்க மட்டுமே ஆலோசனை வழங்கப்படுகிறது. மத நம்பிக்கையில், யாரும் தலையிட போவதில்லை. 'நீட்' தேர்வு எழுத வரும்போது, தாலிச்செயினை கூட, கழற்றி வைத்துவிட்டு வர வேண்டுமென கூறுகின்றனர். ஆனால், தமிழக அரசு மதச்சார்பின்மையோடு எந்த காரியம் செய்தாலும், அதை விமர்சிக்க வந்து விடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 06:57

மத அடையாளங்களோடு இருப்பது மனிதனின் அடிப்படை உரிமை இல்லையா ?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 30, 2025 06:29

மதசார்புக்கும் உனது அரசுக்கும் மிக நீண்ட நெடிய தூரம் உள்ளது மகேஷ் , நீங்க மதவாதிகளோடு கைகோர்த்து ஆடுவதை ஜார்ஜு பொன்னையாக்களும் , அலிகளும் நிரூபிக்கின்றன , மத தீவிரவாதிகளின் சாவு கூட கொண்டாடப்படும் அவல நிலை திமுக ஆட்சியில் நடக்கிறது , அந்த மத பெண்களின் படங்கள் பாட புத்தகங்களில் அவர்களின் மத அடையாளர்த்தோடு தானே போட்டுள்ளீர்கள் , அப்படி போட்டவர்களை சஸ்பெண்ட் செய்திருந்தீர்கள் என்றால் உங்களின் மதசார்பற்ற வார்த்தையை மதித்திருப்பேன் , இல்லையென்றால் நீங்களும் வெளிநாட்டு மதத்தினரோடு சேர்ந்து கூத்தடிக்கிறீர்கள் என்று தான் நிஜத்தை சொல்லுவேன்


Mani . V
ஜூன் 30, 2025 04:54

அந்த ஊழல் பேர்வழி என்று சொன்னியே, ஊழலில் ஊறித் திளைக்கும் உங்களுக்கு வேண்டுமானால் அவர் கடவுளாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் ஊழலின் ஊற்றுக்கண். ஊழலின் தந்தை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை